‘நாட் ரீச்சபிள்’ – விமர்சனம்!

சில பெண்கள் மர்மமான முறையில் காணாமல் போகிறார்கள். சில பெண்கள் கொலை செய்யப்படுகிறார்கள். போலீஸார் விழி பிதுங்கி நிற்கின்றனர். இதற்காண காரணம் என்ன? கொலையாளி யார்? போலீஸ் கண்டுபிடித்தார்களா? இல்லையா? என்பது தான் ‘நாட் ரீச்சபிள்’ படத்தின்  சுவாரஸ்யமான கதை.

‘நாட் ரீச்சபிள்’  திரைப்படம் வித்தியாசமான மர்டர், மிஸ்ட்ரி த்ரில்லர். `காவலன் SOS’ ஆப்பினை முன்னிலைப் படுத்தி இந்தப்படத்தினை தயாரித்தற்காக தயாரிப்பாளரையும்  இயக்குனரையும் பாராட்டலாம்.

கொலையாளி யார் என்பதை க்ளைமாக்ஸ் வரை சஸ்பென்சாக கொண்டு சென்ற திரைக்கதைக்கு ஒரு சபாஷ் சொல்லாம். ஆனால் சிலருக்கு க்ளைமாக்ஸ் நெருங்குவதற்கு முன்பு தெரிந்துவிட வாய்ப்பு இருக்கிறது. மேக்கிங்கில் பட்ஜெட் பற்றாக் குறையால் சில அசௌகரியங்கள் இருந்தாலும் கதை, திரைக்கதையில் அது இல்லை.

போலீஸ்  விசாரணை அதிகாரியாக நடித்திருக்கும் விஷ்வா, சப் இன்ஸ்பெக்டராக  நடித்திருக்கும் சுபா இருவரும் இயல்பாக நடித்து இருக்கிறார்கள். மனநலம் பாதிக்கப்பட்டவராக  நடித்து இருக்கும் சாய் தன்யா, சிறப்பாக நடித்து இருக்கிறார். வித்தியாசமான கதாபாத்திரம் ஏற்ற அவரின் துணிச்சலை பாராட்டலாம். அதேபோல் ஹரிதா ஸ்ரீயும் கதாப்பாத்திரத்தை உணர்ந்து நடித்து இருக்கிறார்.

இலக்கியா, சாய் ரோகிணி,காதல் சரவணன், காலங்கள் தினேஷ், பிர்லா போஸ், ஷர்மிளா என படத்தில் நடித்திருக்கும் அனைவரும் இயக்குனரின் தேவைகேற்ப நடித்து இருக்கிறார்கள்.

சுகுமாரன் சுந்தருடைய ஒளிப்பதிவும், சரண்குமாரின் பின்னணி இசையும் மோசம் என சொல்லாத வகையில் கிடைத்த பட்ஜெட்டில் சிறப்பாகவே செய்து இருக்கிறார்கள். இவர்களுடைய உழைப்பு படத்தின் பலமாகவும் இருக்கிறது.

பெண்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கதைக்களம்,  அமைத்த இயக்குநர் சந்துரு முருகானந்தம், பெண்கள் சார்ந்த நெருடலான விஷயத்தை கையில் எடுத்து இருப்பது முரணாக இருக்கிறது.

த்ரில்லர் படங்களை விரும்பி பார்ப்பவர்கள்  ‘நாட் ரீச்சபிள்’  படத்தினை  தாராளமாக பார்க்கலாம்.