‘ரத்தம்’ ரிலீஸ் தள்ளி வைப்பு. தியேட்டர்கள் கிடைப்பதில் சிக்கல்!

பிரபலமான திரைப்படங்களை ‘தமிழ்ப் படம்’ என்ற பெயரில் நக்கல் செய்து, தமிழ் சினிமாவுக்கு இயக்குநராக அறிமுகமானவர், சி.எஸ்.அமுதன். இவரது இயக்கத்தில் உருவாகி, ரிலீஸூக்கு தயாராக உள்ள ரத்தம், திரைப்படத்தில் விஜய் ஆண்டனி, மஹிமா நம்பியார், நந்திதா ஸ்வேதா, ரம்யா நம்பீசன் ஆகியோர் நடித்துள்ளனர்.

ரத்தம் திரைப்படத்தினை, ‘இன்ஃபினிடி ஃபிலிம் வென்ச்சர்ஸ்’ சார்பில் கமல் போரா, லலிதா தனஞ்செயன், பிரதீப், பங்கஜ் போரா, விக்ரம் குமார் ஆகியோர் படத்தை தயாரித்துள்ளனர்.

அண்மையில் வெளியான ‘ரத்தம்’ திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்க்காத நிலையில், விஜய் ஆண்டனியின் இருவேறு தோற்றங்களை, நெட்டிசன்கள் கலாய்த்து வந்த நிலையில், இப்படம் வரும் செப்டம்பர் 28 ஆம் தேதி வெளியாவதாக அறிவிக்கப்பட்டது. திரையரங்க உரிமையாளர்கள் ராகவா லாரண்சின் ‘சந்திரமுகி 2’ திரைப்படத்தினை வெளியிட ஆர்வம் காட்டுவதால், விஜய் ஆண்டனியின் ‘ரத்தம்’ திரைப்படத்திற்கு தியேட்டர்கள் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனால், ரத்தம் திரைப்படம் அக்டோபர் 6 ஆம் தேதி வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.