நந்தமுரி கல்யாண் ராம் ‘டெவில்’ படத்தில், பிரிட்டிஷ் ரகசிய ஏஜென்டாக நடித்து வருகிறார். சமீபத்தில் வெளியான இப்படத்தின் டீசர் ரசிகர்கள் மத்தியில் பலத்த எதிர்பார்ப்பினை உருவாக்கியுள்ளது. வரும், நவம்பர் 24, தேதி திரையரங்குகளில் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.
மலையாள நடிகை சம்யுக்தா, டெவில் படத்தில் கல்யாண் ராம் ஜோடியாக நடிக்கிறார். அவரது பிறந்த நாளான இன்று (செப்டம்பர் 11), இப்படத்தில் அவர் நடிக்கும், நிஷாதா கதாபாத்திரத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழுவினர், வெளியிட்டுள்ளனர்.
‘தேவன்ஷ் நாமா’ வழங்கும் டெவில் திரைப்படத்தை, ‘அபிஷேக் பிக்சர்ஸ்’ சார்பில், அபிஷேக் நாமா தயாரித்து, இயக்கி வருகிறார்.
டெவில் படத்தின் கதை, திரைக்கதை மற்றும் வசனங்களை ஸ்ரீகாந்த் விசா எழுதியுள்ளார். ஹர்ஷவர்தன் ராமேஷ்வர் இசையமைக்க, சௌந்தரராஜன் ஒளிப்பதிவு செய்து வருகிறார்.
ஸ்பை த்ரில்லர் படமான டெவில் குறித்த கூடதல் தகவல்களை, படக்குழு அதிகாரப்பூர்வமாக வெளியிட உள்ளது.