பைக்கில் பறந்த விஜய்!!!

‘தெறி’, ‘மெர்சல்’ ஆகிய படங்களின் வெற்றிக்கு பிறகு அட்லீ – விஜய் மூன்றாவது முறையாக இணைந்துள்ள படம் ‘பிகில்’.. கதாநாயகியாக நயந்தாரா நடித்து வரும் இந்தப் படத்தை,  ஏ.ஜி.எஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார்.

பெண்கள் கால்பந்தாட்டத்தை மையப்படுத்தி எடுக்கப்பட்டு வரும் ‘பிகில்’ படத்திற்கு விஜய் ரசிகர்களிடம் பெரிய எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது. இந்தப் படத்தின் டைட்டிலும், போஸ்டரும் வெளியானபோது மிகப்பெரிய அளவில் ட்ரென்ட் ஆகியது. அதேபோல் சமீபத்தில் வெளியான ‘சிங்கப் பெண்ணே’ பாடலும் ட்ரென்ட் ஆனது குறிப்பிடதக்கது.

 

இந்நிலையில் சென்னை, ரெட் ஹில்ஸ் அருகே உள்ள பாலத்தில் விஜய் வேகமாக பைக் ஓட்டும் காட்சி ‘பிகில்’ படத்திற்காக படம்பிடிக்கப்பட்டது. இந்தக்காட்சியினை செல்போன்களில் படம்பிடித்த அவரது ரசிகர்கள் இணையத்தில் பகிர்ந்து வருகின்றனர். இது பெரிய அளவில் ட்ரென்ட் ஆகத்தொடங்கியுள்ளது. தீபாவளி வெளியீடாக வரும் இந்தப்படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பும் அது தொடர்பான வேலைகளும் மும்மரமாக நடைபெற்று வருகிறது.

தன்னுடைய படங்களில் அவ்வப்போது பாட்டுப் பாடும் விஜய், ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் முதன் முறையாக  இந்தப்படத்தில் ‘வெறித்தனம்’ என்ற பாடலை பாடியுள்ளார்.