அட்லி இயக்கும் படத்தில் தளபதி விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா!

தெறி-மெர்சல் வெற்றி படங்களின் வெற்றி இணையர்கள் தளபதி விஜய்-இயக்குனர் அட்லி, மூன்றாவது முறையாக விஜய்யின் 63வது படத்தில் இணைகிறார்கள். தமிழ் திரையுலகின் முண்ணணி தயாரிப்பு-விநியோக நிறுவனமான ‘ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட்’, இம்மெகா பட்ஜெட் படத்தை தயாரிக்கிறது.

தற்போது இந்த படத்தில் நயன்தாரா தளபதி விஜய்க்கு ஜோடியாக நடிக்க இருப்பதாக அதிகாரபூர்வமான அறிவிக்கப்பட்டுள்ளது.

இசையமைப்பாளர் இசைப்புயல் A R ரஹ்மான் இசையமைக்கிறார்.,விவேக் அவர்கள் பாடல் வரிகளை எழுத இருக்கிறார். ஒளிப்பதிவு G K விஷ்ணு ,சண்டை பயிற்சி அனல் அரசு ,படத்தொகுப்பு பணிகளை ஆண்டனி L ரூபன் செய்ய இருகிறார்.