கஜா புயலால் பாதிக்கப்பட்ட கிராமத்தை தத்தெடுத்த விஷால்

நடிகர் விஷால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தனது கருணை உள்ளத்தால் விரைந்துச் சென்று தன் உதவி கரத்தை நீட்டுவார்.

அதற்கு ஆதாரமாக அண்மையில் தனியார் தொலைக்காட்சி ஒன்றில் ‘நாம் ஒருவர்’ என்ற நிகழ்ச்சி சந்தேகத்திற்கிடமின்றி நிரூபணமாகியுள்ளது. வறுமையில் வாடும் மக்களுக்கு அவர் அளித்து வரும் உதவிகள், பாதிக்கப்பட்ட மக்கள் மத்தியில் மிகுந்த நம்பிக்கையையும், மகிழ்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

சமூக பிரச்னை மற்றும் சினிமா சார்ந்த பிரச்னைகளுக்கு தனது தனிப்பட்ட கடமைகளையும் ஒதுக்கி, முன்வந்து பிரச்னைகளுக்கான தீர்வைக் காண்பவர் விஷால்.

தமிழ்நாட்டின் ‘டெல்டா பகுதி’ முழுவதும் கஜா புயலால் பேரழிவை சந்தித்திருக்கிறது. அதில், தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை சட்டமன்ற தொகுதியில், கார்காவயல் என்ற கிராமத்தை தத்தெடுத்துள்ளார் விஷால். இது தற்காலிகமாக இல்லாமல், முழுமையாக மறுசீரமைப்பு செய்து இந்தியாவிலேயே ‘சிறந்த கிராமமாக‘ மாற்றுவேன் என்றும் அந்த கிராம மக்களுக்கு உறுதியளித்துள்ளார்.

இதனால் மகிழ்ச்சியடைந்த கார்காவயல் கிராம மக்கள், எங்கள் கிராமத்தை தத்தெடுத்த விஷாலுக்கு எப்பொழுதும் நாங்கள் ஆதரவாக இருப்போம் என்று கூறியுள்ளனர்.