விமானம் – விமர்சனம்!

கிரண் கொரபதி மற்றும் ஜீ ஸ்டூடியோ தயாரிப்பில் வெளியாகியிருக்கும் படம், விமானம். சமுத்திரக்கனி, மாஸ்டர் துருவன், மீரா ஜாஸ்மின், அனசுயா பரத்வாஜ், தன்ராஜ், ராகுல் ராமகிருஷ்னா, மொட்டை ராஜேந்திரன் ஆகியோர் நடித்திருக்க, எழுதி இயக்கியிருக்கிறார் சிவபிரஷாத் யானாலா.

கட்டண கழிப்பறையை சுத்தம் நிர்வகித்து வரும், மனைவியை இழந்த, உடல் ஊனமுற்ற வீரையாவின் (சமுத்திரக்கனி), ஒரே மகன் ராஜு (மாஸ்டர் துருவன்). ராஜுவுக்கு (மாஸ்டர் துருவன்) விமானம் என்றால் கொள்ளை பிரியம். வீட்டுக்கு அருகே உள்ள விமான நிலையத்தை சுற்றி சுற்றி வருகிறான். விமானத்தில் பறப்பதற்கும் ஆசைபடுகிறான். வீரையா தனது மகன் ராஜூவை எப்படியாவது படிக்கவைத்து, நல்ல நிலைமைக்கு கொண்டு வந்துவிடவேண்டும் என்ற ஆசை.

இந்நிலையில் திடிரென மயங்கி கீழே விழுகிறான், ராஜூ. அவனை பரிசோதிக்கும் டாக்டர், ராஜூவுக்கு ரத்து புற்று நோய் இருப்பதாகவும் இன்னும் கொஞ்ச காலம் மட்டுமே உயிருடன் இருப்பான் என கூறுகிறார். இதனால் கடும் அதிர்ச்சியடையும் வீரையா, தனது மகன் இறப்பதற்குள், எப்படியாவது விமானத்தில் அழைத்து செல்ல முடிவெடுக்கிறார். மிக சொற்ப வருவாயில், குடும்பம் நடத்திவரும் அவர், என்ன செய்தார். என்பதே, விமானம் படத்தின் கதை.

படத்தின் முதல்பகுதியில் தேவையற்ற திரும்ப, திரும்ப வரும் காட்சிகள் போரடிக்க வைக்கிறது. சோகத்திற்காகவே வலிய திணிக்கப்பட்ட காட்சிகள் அதிகம். உடல் ஊனமுற்ற கதாபாத்திரத்தில், சமுத்திரக்கனியின் படு செயற்கையான நடிப்பு, எரிச்சல் ஏற்படுத்துகிறது. அவர், ஊனமுற்றவராக காட்டப்படும் பல காட்சிகளில், அவரது கால்கள் நல்ல நிலைமையில் இருக்கிறது. அதை எடிட், செய்தாலும் எந்த பாதிப்பும் இல்லை. என்ற நிலையில், அதை அப்படியே விட்டிருக்கிறார்கள். அது இயக்குநரின் தவறா? எடிட்டரின் தவறா?!

செருப்பு தைக்கும் தொழிலாளியாக நடித்திருக்கும் ராகுல் ராமகிருஷ்னா, விபச்சாரியாக நடித்திருக்கும் அனசுயா பரத்வாஜ் சம்பந்தப்பட்ட காட்சிகள் ரசிக்கும்படி இல்லை.

மாஸ்டர் துருவன், ராஜு கதாபாத்திரத்தில் கவனம் ஈர்க்கும்படி நடித்திருக்கிறான்.

க்ளைமாக்ஸ் காட்சியில் மீரா ஜாஸ்மின், சமுத்திரக்கனி, மாஸ்டர் துருவன் சம்பந்தப்பட்ட காட்சிகள்மட்டுமே மனதை தொடுகிறது.

விமானம் – வலிய திணிக்கப்பட்ட அப்பாவின் பாசம்.