தயாரிப்பாளர் ஸ்ருதி திலக் 11:11 Productions சார்பில் தயாரித்து சிபிராஜ், ஷ்ரின் கான்ஞ்வாலா , நட்டி, சமுத்திரகனி, ரித்விகா, யாமினி சந்தர் ஆகியோர் நடித்துள்ள படம், ‘வால்டர்’தீப்படம் மிகுந்த எதிர்பார்ப்பில் மார்ச்13 ஆம் தேதி வெளியாகிறது.அறிமுக இயக்குனர் அன்பு இயக்கியுள்ளார்.
சிபிராஜ் ஜோடியாக நடித்துள்ள ‘வால்டர்’ படத்தின் நாயகி ஷ்ரின் கான்ஞ்வாலா , படம் குறித்து பேசியதாவது…
‘இயக்குநர் அன்பு முதன்முதலாக என்னிடம் கதையை கூறியபோது எல்லாம் கலந்த மிக்ஸ்டு திகில் மற்றும் திருப்பங்கள் நிறைந்ததாக திரைக்கதை இருந்தது. மேலும் படத்தில் வரும் சம்பவங்கள் உண்மையில் நடந்தது என அவர் கூறியது எனக்கு அதிர்ச்சி தருவதாக இருந்தது.
சமூக நோக்குடன் கூடிய அழுத்தமான படங்களில் தொடர்ந்து நடிக்கும் சூழ்நிலை தானாகவே அமைந்துவிடுகிறது. மிக அழுத்தமான, பதட்டமான திரைக்கதை அமைந்திருந்தாலும், ரொமான்ஸும் வருவது போல திரைக்கதை அமைத்துள்ளார் இயக்குனர் அன்பு. இப்படத்தில் எனக்கு மிகச்சிறந்த கதாபாத்திரம் தந்துள்ளார்.
சிபிராஜ் ஒரு அற்புதமான நடிகராக, எனக்கு மிகவும் ஆதரவாக இருந்தார். படப்பிடிப்பில் பல நேரங்களில் வசனங்களை சரியாக உச்சரிக்க, நான் அதிக நேரம் எடுத்து கொள்வேன். அம்மாதிரியான நேரங்களில் பொறுமையாக உடனிருந்து உதவி செய்வார்.
இப்படம் ரசிகர்களை கமர்ஷியலாக கவருவதுடன் சமுகத்திற்கான தேவையான முக்கியமான கருத்தை கூறுவதாகவும் இருக்கும் என்றார்.