வெளியீட்டிற்கு முன்பே விற்ற வால்டர் படத்தின் சாட்டிலைட் உரிமை!

Walter worldwide release on March 13

வால்டர் வெற்றிவேல் படத்தின் மூலம், ‘வால்டர்’ என்ற சொல்லுக்கு கூடுதல் சிறப்பு கொடுத்தவர்கள் இயக்குனர் பி.வாசுவும், சத்யராஜூம் தான். மாபெரும் வெற்றி பெற்ற அந்த படத்தின் முதல் பாதி பெயரில் சிபி சத்யராஜ் நடிப்பதாக செய்திகள் வந்தவுடனே ‘வால்டர்’ படம் பெரும் எதிர்பார்ப்புக்கு உள்ளானது.

11:11 Productions சார்பில் ஸ்ருதி திலக் தயாரிக்க “வால்டர்” படத்தை புதுமுக இயக்குநர் U.அன்பு இயக்கியுள்ளார்.

மருத்துவமனைகளில் இருந்து குழந்தைகள் காணாமல் போகிறது. அப்படியே மீட்கபட்டாலும்  குழந்தைகள் மறுநாளே மரணம் அடைகிறது. அந்த மர்மத்தை கண்டு பிடிக்க  வேண்டும் என்கிற ஆவேசத்துடன் போலீஸ் அதிகாரி சிபி சத்யராஜ். இதனுடைய கதை திரைக்கதை தான்  ‘வால்டர்.’ என்கிறார்கள்.

படம் வெளியாகும் முன்பே  வால்டர் படத்தின் சாட்டிலைட் உரிமை  பெரும் விலைக்கு விற்கப்பட்டுள்ளது, குறிப்பிடதக்கது.