Walter Pre-Release Event
11:11 Productions சார்பில் பிரபு திலக் , தயாரிக்க “வால்டர்” படத்தை புதுமுக இயக்குநர் U.அன்பு இயக்கியுள்ளார். சிபி சத்யராஜ் போலீஸ் அதிகாரியாக நடிக்கும் இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பின் போது தயாரிப்பாளர் பிரபு திலக் பேசியதாவது..
இங்கு நான் நிறைய பேச நினைக்கிறேன். ஒரு தயாரிப்பாளரின் கடமை சினிமாவில் மிகப்பெரிது. மிக முக்கியமானது. கதை கேட்பதில் ஆரம்பித்து அது உருவாகி அதனை கொண்டு சேர்ப்பது வரை, அது பெரும் கடமை. ஒரு சினிமாவால் சமூகத்தில் மிகப்பெரிய தாக்கத்தை உண்டாக்க முடியும். சினிமாவில் சமூகத்திற்காக ஏதாவது நல்லதை சொல்ல வேண்டும் என நினைக்கிறேன்.
தமிழ் சினிமாவில் அந்த காலத்திலேயே பெரும் புரட்சி ஏற்படுத்தும் படங்கள் வந்திருக்கிறது. சமூகத்தை பாதிக்ககூடிய அல்லது சமூகத்திற்கான தேவையை கொண்டு போய் சேர்ப்பது தான் சினிமாவின் வேலை. இரண்டு சமூக மக்கள் எங்கோ சண்டை போட்டுக் கொண்டதை சினிமாவாக்கி சம்பாதிப்பது சினிமாவின் வேலையல்ல. ஒரு சிறு திரைக்காட்சி கூட பெரும் பாதிப்பை ஏற்படுத்தும். ஒரு மிகப்பெரும் ஆயுதம் இந்த சினிமா. அப்படி பட்ட சினிமாவில் வேலை செய்யும் வாய்ப்பு தந்த என் அம்மாவிற்கும் மற்ற அனைவருக்கும் நன்றி கூறிக்கொள்கிறேன்.
ஒரு கோவிலின் கர்பகிரகத்தில் கிடைக்கும் அமைதி எனக்கு சினிமாவில் கிடைக்கிறது. எனது டீமுடன் நிறைய சண்டை போட்டிருக்கிறேன். ஆனால் என் குடும்பமாக அவர்கள் என்றென்றும் என்னுடன் இருப்பார்கள். “வால்டர்” ஒரு கமர்ஷியல் படம் அதிலும் சமூகத்திற்கு தேவையான ஒரு விசயத்தை பற்றி பேசியுள்ளோம். நம் அடுத்த தலைமுறையை குழந்தைகளை பாதுகாப்பாக பார்த்து கொள்ள வேண்டும் என்று சொல்லியிருக்கிறோம். இன்று படம் உங்கள் முன் வந்துள்ளது. நீங்கள் ஆதரிப்பீர்கள் என்று நம்புகிறேன் நன்றி. என்றார்.