OTT – தியேட்டரில் ஒரே நேரத்தில் ரிலீஸாகும் தமிழ்ப்படம்!

மூன் ஸ்டார் பிக்சர்ஸ் சார்பில், வி மாதேஷ் அதிக பொருட் செலவில் தயாரித்திருக்கும் படம், யோக்கியன். இதில் ஜெய் ஆகாஷ் தந்தை, மகன் என இரட்டை வேடத்தில் நடித்திருக்கிறார். ஹீரோயின்களாக கவிதா, ஆர்த்தி சுரேஷ், குஷி மற்றும், சாம்ஸ் உள்ளிட்ட பலர் நடித்திருக்கின்றனர். பால் பாண்டி ஒளிப்பதிவு செய்திருக்கிறார்.  ஜூபின் இசை அமைத்திருக்கிறார். ஜெய் ஆகாஷிடம் உதவியாளராக பணியாற்றிய சாய் பிரபா மீனா இயக்கியிருக்கிறார்.

யோக்கியன் திரைப்படம், ஜூலை 28 ஆம் தேதி தியேட்டர் மற்றும் A கியூப் மூவிஸ் ஆப் (A qube Movies App) என்ற ஒ டி டி தளத்தில் முதல் முறையாக ஒரே நேரத்தில் ரிலீஸ் ஆகிறது.

இது குறித்து ஜெய் ஆகாஷ் கூறியதாவது..,

எந்தவொரு படமும் மக்களிடம் சென்று சேர்வதற்கு தியேட்டர்கள் தேவை. சிறிய படங்களை தியேட்டர்காரர்கள் திரையிட மறுக்கிறார்கள். ஆனால், இப்போது தியேட்டருக்கு ரசிகர்கள் பெரிய ஸ்டார் படங்கள், பெரிய பேனர் படங்களை மட்டுமே பார்க்க வருகிறார்கள்.

ரசிகர்களையும் குற்றம் சொல்ல முடியாது. தற்போதைய நிலைமை இதுதான். இதனால் தான், ஏ கியூப் மூவிஸ்.  என்ற ஆப்பை நான் தொடங்கியிருக்கிறேன். இதுவரை அமேசான், நெட்பிளிக்ஸ் பார்த்து வந்தார்கள். அதில் மாத சந்தா கட்ட வேண்டும். ஆனால் ஏ.கியூப் மூவிஸ் ஆப்பில் அப்படி இல்லை. ஒரு படத்திற்கு 50 ரூபாய் மட்டும் கட்டினால் போதும்.

படத்தின் டிரெய்லர் வரும் அது பிடித்திருந்தால் 50 ரூபாய் மட்டும் கட்டி யோக்கியன் படத்தை பார்க்கலாம். ஒரு நாள் முழுவதும் இப்படத்தை பார்க்க முடியும். வசதியான நேரத்தில். உலகின் எந்த மூலையிலிருந்தும் வீட்டிலிருந்தபடியே டிவியிலும் இதை கனெக்ட் செய்து பார்க்க முடியும். இதனால் மக்களுக்கு நேரம் மற்றும் தியேட்டருக்கு சென்றால் ஏற்படும் இதர செலவுகளையும் மிச்சம் செய்யலாம்.

ஆனால் ஏ.கியூப் மூவிஸ் ஆப்பில் முதல் முறையாக, ஒரே நேரத்தில் சினிமா தியேட்டரிலும், ஒ டி டி யிலும், யோக்கியன் படம் ஜூலை 28ம் தேதி ரிலீஸ் ஆகிறது.

A கியூப் ஆப்பில் 3 லட்சம் பேர் சந்ததாரர்களாக இருக்கிறார்கள்.  இதனால், படத்தின் மூலம் அசல் தவிர லாபமும் தயாரிப்பாளருக்கு கிடைக்கும். தற்போதைக்கு ஏ கியூப் ஆப்பில் வெளியிட, என்னுடைய 3 படங்கள் ரெடியாக உள்ளது. படம் எடுத்துவிட்டு தியேட்டர் கிடைக்காமல் இருப்பவர்கள் தங்கள் படங்களை ஏ கியூப் ஆப்பில் வெளியிடலாம். அவர்களுக்கு முறையான கணக்கு வழங்கப் படும். அத்துடன் 80 சதவீதம் வருமானம் அளிக்கப்படும். 20 சதவீதம் மட்டுமே ஆப்பிற்காக பிடித்தம் செய்யப்படும். என்று, ஜெய் ஆகாஷ் கூறினார்.