பூஜையுடன் துவங்கிய “யோலோ” திரைப்படம்!

MR Motion Pictures சார்பில் மகேஷ் செல்வராஜ்  தயாரிப்பில்,  இயக்குநர் S.சாம் இயக்கத்தில்,  புதுமுகம் தேவ் நாயகனாக மற்றும் தேவிகா நாயகியாக  நடிக்க, ரொமான்ஸ் காமெடி ஜானரில், கமர்ஷியல் எண்டர்டெயின்ராக உருவாகும் படம்,  ‘யோலோ’. இத்திரைப்படத்தின் பூஜை, திரை பிரபலங்கள் கலந்துகொள்ள, படக்குழுவினருடன் இன்று இனிதே நடைபெற்றது.

இயக்குநர்கள் அமீர் மற்றும் சமுத்திரகனியிடம் இணை இயக்குநராக பணியாற்றிய S.சாம், இப்படம் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார். யோலோ படத்தின் படப்பிடிப்பு ஒரே கட்டமாகச் சென்னை மற்றும் அதன் சுற்றுப்புறப் பகுதிகளில் நடத்த  திட்டமிடப் பட்டுள்ளது.

யோலோ படத்தின் பூஜையில் இயக்குநர் அமீர், இயக்குநர் சமுத்திரகனி, இயக்குநர் சுப்பிரமணியம் சிவா, ரமணா முதலானோர் கலந்துகொண்டு படக்குழுவினரை வாழ்த்தினர்.

யோலோ படத்தினில்,  தேவ், தேவிகா நாயகன் நாயகியாக நடிக்க, முக்கிய பாத்திரங்களில் படவா கோபி, பிரவீன், சுவாதி நாயர், ஆகாஷ் பிரேம், நித்தி பிரதீப், திவாகர், யுவராஜ், திலீப் குமார், விஜே நிக்கி, தீபிகா, தீப்சன், சுப்பு, பூஜா ஃபியா, விக்னேஷ், லக்‌ஷ்மி ஆகியோர் இணைந்து நடிக்கிறார்கள்.

கதை – ராம்ஸ் முருகன்.  திரைக்கதை – S. சாம், ராம்ஸ் முருகன், பண்பு செல்வன்.