தயாரிப்பு : சௌந்தர்யன் பிச்சர்ஸ்
நடிகர்கள் : ஜான் விஜய் சித்தார்த் ஸ்ரீராம் கார்த்திக் அஞ்சலி நாயர் ரவீனா
இயக்கம் : எஸ் சுரேஷ் குமார்
கொடைக்கானல் சுற்றுலா வந்த நான்கு நண்பர்கள் மற்றும் கணவன், மனைவி அவர்களது ஒரே மகள் என ஒரு வனப்பகுதிக்குள் எதிர் எதிரே விடுதிகளில் தங்குகின்றனர். சில நாட்களில் இரு தரப்பினரும் நன்கு பரிச்சயமாகி விடுகின்றனர்.
இந்நிலையில் தம்பதியின் மகளும், நான்கு நண்பர்களில் ஒருவரும் காணாமல் போகிறார்கள். இருவரும் எங்கே சென்றனர்? அவர்களுக்கு என்ன ஆனது? என்பது தான், ‘அகடம்’ படத்தின் கதை.
விஜய் ஆனந்த், சித்தார்த், ஸ்ரீராம் கார்த்திக், அஞ்சலி நாயர், ரவீனா உள்ளிட்டோர் தங்களுக்கான நடிப்பினை சிறப்பாகவே செய்துள்ளனர்.
போலீஸ் அதிகாரி கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கும் ஜான் விஜய்யின் நடிப்பு, சில இடங்களில் ‘இவருக்கு பதில் வேறு யாராவது நடித்திருக்கலாமோ’ என எண்ணத்தோன்றுகிறது.வழக்கமான ஓவர் ஆக்டிங்!
சின்ன பட்ஜெட்டில், கிடைத்த வசதிகளை வைத்துக்கொண்டு க்ளைமாக்ஸ் வரை, யூகிக்க முடியாத திரைக்கதையை அமைத்து ரசிகர்களை நகம் கடிக்க வைத்திருக்கிறார், இயக்குனர் எஸ்.சுரேஷ் குமார். பாராட்டப்பட வேண்டியவர்.
ஜான் சிவநேசன் இசை, திரைக்கதைக்கு ஏற்றபடி இருக்கிறது. சாம்ராட்டின் ஒளிப்பதிவும் பாராட்டப்பட வேண்டியது தான்.
சஸ்பென்ஸ், த்ரில்லர் ஜானர் படங்கள் உங்களுக்கு பிடிக்கும் என்றால், தவறாமல் பார்க்கலாம்