அமெரிக்காவை அண்மையில் பெரும் பீதிக்குள்ளாக்கியிருக்கும் புயல் ஃபுளோரன்ஸ் புயல்!. இப்புயலால் அமெரிக்காவின் கிழக்கு கடலோரப்பகுதிகள் கடுமையாக பாதிக்கப்படும் என அந்நாட்டு வானிலை மய்யம் கடும் எச்சரிக்கை விடுத்திருந்தது. இதன் காரணமாக . நேற்று இரவு முதல், அப்பகுதியிலிருந்த ஆயிரக்கணக்கான மக்கள் வெளியேற்றப்பட்டு நிவாரண மையங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
ஃபுளோரன்ஸ் புயல் அமெரிக்காவின் கிழக்கு கடலோரப் பகுதிகளை நோக்கித் தாக்க துவங்கியுள்ளது. இதனால் வடக்கு மற்றும் தெற்கு கரோலினா மாகாணங்களின் உட்புறங்களை நோக்கி மணிக்கு 250 கிலோ மீட்டர் வேகத்தில் நகர்ந்து வருகிறது.
ஃபுளோரன்ஸ் புயல் காரணமாக ஒரு லட்சத்துக்கும் மேலான வீடுகளுக்கு செல்லும் மின் இணைப்புகள் பாதுகாப்பு காரணங்களுக்காக துண்டித்து வைக்கப்பட்டுள்ளது. வடக்கு கரோலினா மாகாணத்தில் பலத்த காற்று மற்றும் மழையினால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
ஃபுளோரன்ஸ் புயல் உள்ளூர் நேரப்படி வெள்ளி காலை எட்டு மணிக்கு, தெற்கு கரோலினாவின் மைர்ட்டில் கடற்கரைப் பகுதியில் கரையைக் கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.