ஐ.நா சபையின் முன்னாள் செயலாளர் கோஃபி அணன் காலமானார்

ஐ.நா சபையின் முன்னாள் செயலாளர் கோஃபி அணன் காலமானார். அவருக்கு வயது 80. கடந்த சில மாதங்களாக உடல் நலக்குறைவால் சிகிச்சை பெற்று வந்த கோஃபி அணன் இன்று காலமானார். இவர் கானாவின் குமசியின் கோபேன்ட்ரோஸ் பகுதியில் பிறந்தவர்.

ஐக்கிய நாடுகள் அவையின் ஏழாவது செயலாளராக இருந்தவர்.

ஜனவரி 1, 1997 இல் இப்பதவிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட கோஃபி அணன் டிசம்பர் 31, 2006 அன்று ஓய்வு பெற்றார்.

கோஃபி அணனுக்கு அமைதிக்கான ‘நோபல் பரிசு’ விருது வழங்கப்பட்டது.