கிங் மேக்கர் காமராஜர் அவர்களது 116 வது பிறந்தநாள் விழா

இந்தியாவில் இரண்டு பிரதமர்களை உருவாக்கிய தி கிங் மேக்கர் காமராஜர் அவர்களது   116 வது பிறந்தநாள் விழா  15.07.2018 அன்று அவர்  வாழ்ந்த அவரது நினைவு இல்லத்தில் கோலாகலமாக கொண்டாடப்பட்டது.

விழாவில் தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் திரு.ஜி.கே.வாசன், மாகாத்மா காந்தியின் தனிச்செயலாளர் திரு.கல்யாணம் மற்றும் காமராஜரின் வாழ்க்கை வரலாற்றை உலகறிய செய்த “ காமராஜ் “ திரைப்பட இயக்குனர் மற்றும் தயாரிப்பாளரான A.பாலகிருஷ்ணன் ஆகியோர் காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.

கடந்த 20 வருடங்களாக காமராஜரின் பிறந்தநாள் விழாவை சீரும் சிறப்புமாக நடத்தி வருகிறோம் என்பதில் பெருமையடைகிறோம் என்றார் இயக்குனர் பாலகிருஷ்ணன். விழாவில் கலந்துகொண்ட அனைவருக்கும் சக்கரை பொங்கல் வழங்கி விழாவை இனிமையாக சிறப்பித்தனர்.