தினந்தோறும் இரவு 9.00 மணிக்கு ,”கேப்டனின் இடி முழக்கம்”

தம் சிம்மக்குரல் கர்ஜனையால் கேட்போரின் கவனத்தை வசீகரிக்கும் வித்தை  நடிகரும் தே.மு.தி.க.பொது செயலாளருமான  கேப்டன் விஜயகாந்த் அவர்களுக்கு மட்டுமே உரியது!

அவர்தம் முழக்கங்கள் தவறு செய்யும் அரசுக்கும்,ஊழல் புரியும் அரசியல்வாதிகளுக்கும் எதிராக அமைந்தன.

அதே நேரம் அலைக்கழிக்கப்படும் மக்களுக்கு ஆதரவாகவும் இருந்தது.மேலும் தமிழக மக்களின் நலனுக்காக  தொலைநோக்கு பார்வையுடன் அவர் பேசிய முழக்கங்கள்  மற்றும்  தே.மு.தி.க.வின் பொது கூட்டங்கள்,தேர்தல் பிரச்சாரங்கள்,மாநாடுகள்,நலத்திட்ட உதவிகள்,எதிர் கட்சி தலைவராக இருந்து செய்த சாதனைகள், மத்திய மாநில அரசுகளின் மக்கள் விரோத போக்கை கண்டித்து நடத்திய போராட்டங்கள் போன்றவற்றின் கம்பிர பேச்சுகள்  ,”கேப்டனின் இடி முழக்கம்”என்ற நிகழ்ச்சியின் மூலம் கேப்டன் டிவியில் வரும் ஆகஸ்ட் 1-ம்  தேதி முதல் தினமும் இரவு 9.00 மணிக்கு ஒளிபரப்பாக உள்ளது.

இடியோசைகளை மிஞ்சும் கேப்டனின் முழக்கங்கள் மறுஒளிபரப்பாக தினமும் காலை 7.30 மணிக்கு  கேப்டன் நியூஸ் தொலைக்காட்சியில் ஒளிபரப்படுகிறது.காண தவறாதீர்கள்!!!