பாகிஸ்தான் நாடாளுமன்ற தேர்தல் – நவாஸ் ஷெரிஃப் இம்ரான் கானிடையே கடும் போட்டி!

342 உறுப்பினர்களைக் கொண்ட பாகிஸ்தானின் 16வது நாடாளுமன்றத்திற்கான தேர்தல் இன்று காலை 8 மணியளவில் தொடங்கியது. இதில் 60 இடங்கள் பெண்களுக்காகவும், 10 இடங்கள் சிறுபான்மையினருக்கும் ஒதுக்கப்பட்டுள்ளது. வாக்குப்பதிவு தொடங்கியதை அடுத்து மக்கள் நீண்ட வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர்.

ஆட்சியைக் கைபற்ற ஆளும் முஸ்லிம் லீக், பாகிஸ்தான் மக்கள் கட்சி, தெஹ்ரிக் ஈ இன்சாப் ஆகியக் கட்சிகளுக்கிடையே  போட்டி நிலவி வருகிறது. இதில் நவாஸ் ஷெரீப்பின் ஆளும் முஸ்லிம் லீக் கட்சிக்கும் இம்ரான்கானின் தெஹ்ரிக் ஈ இன்சாப் உள்ளிட்ட கட்சிகளுக்கு இடையே தான் கடும் போட்டி.

தேர்தலுக்கு முன்பு வரை பாகிஸ்தானில் நடந்து வந்த தற்கொலை சம்பவங்கள் போன்றவற்றை கருத்தில் கொண்டு பாகிஸ்தான் ராணுவத்தினர் உச்சக்கட்ட பாதுகாப்பு பணிக்காக சுமார் 3 லட்சம் ராணுவத்தினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இருப்பினும் பலுசிஸ்தான் மாகாணத்தில் வாக்குச்சாவடி ஒன்றில் நடந்த குண்டு வெடிப்பில் 32 பேர் கொல்லப்பட்டிருக்கிறார்கள்.

ஓட்டுப்பதிவு முடிந்தவுடன் வாக்குகள் எண்ணப்பட்டு 26 ஜூலை நாளை முடிவு அறிவிக்கப்படவுள்ளது குறிப்பிடதக்கது.