“அன்பும் நன்றியும் நிறைந்த மனதுடன் பகிர்கிறேன்…” – நடிகை ப்ரியா!
Priya Ties the Knot with Raj in an Intimate Ceremony; Shares Heartfelt Note with Media and Fans!
குடும்பத்தினர் மற்றும் நெருங்கிய நண்பர்கள் முன்னிலையில் தனது நீண்ட நாள் அன்பானவரான ராஜ் என்பவரைத் திருமணம் செய்துகொண்டதாக ப்ரியா மகிழ்ச்சியுடன் அறிவித்துள்ளார். நவம்பர் 11-ம் தேதி இனிதே நடைபெற்ற இத்திருமணம் குறித்து அவர் பத்திரிகை மற்றும் ஊடக நண்பர்களுக்கு நெகிழ்ச்சியான கடிதம் ஒன்றைப் பகிர்ந்துள்ளார்.
அந்த அறிக்கையில் அவர் கூறியிருப்பதாவது: “அன்பும் நன்றியும் நிறைந்த மனதுடன் ஒரு மகிழ்ச்சியான செய்தியை உங்களுடன் பகிர்ந்துகொள்கிறேன். நவம்பர் 11-ம் தேதி, எங்கள் குடும்பத்தினர் மற்றும் நெருங்கிய நண்பர்களின் முன்னிலையில், எனக்கும் ராஜ்-க்கும் இனிதே திருமணம் நடைபெற்றது.
இத்தனை ஆண்டுகளாக என் பயணத்தில் அன்பும் ஆதரவும் அளித்து, என் வாழ்வின் முக்கியமான தருணங்களில் மகிழ்ச்சியுடன் பங்கெடுத்துக்கொண்ட பத்திரிகை மற்றும் ஊடக நண்பர்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றி. நெருங்கியவர்கள் சூழ ஒரு சிறிய நிகழ்வாகத் திருமணத்தைக் கொண்டாடியதால், உங்கள் அனைவரையும் நேரில் அழைக்க இயலவில்லை. இந்த மகிழ்ச்சியான தருணத்தில் உங்கள் அன்பையும் வாழ்த்துகளையும் விரும்புகிறோம். உங்கள் அன்பு என்றும் எங்களுடன் இருக்கட்டும்” எனத் தெரிவித்துள்ளார்.
மிகவும் எளிமையாகவும், நெருங்கிய உறவினர்கள் சூழவும் நடைபெற்ற இத்திருமண நிகழ்வைத் தொடர்ந்து, புதுமணத் தம்பதிகளான ப்ரியா – ராஜ் ஆகியோருக்குத் திரையுலகினரும், ரசிகர்களும், ஊடக நண்பர்களும் தங்களது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.