சாதனை படைத்த ஷாருக்கானின் ‘து மில் ஜாயே’ பாடல்!
Shah Rukh Khan’s ‘Tu Mil Jaaye’ from ‘King’ Tops Ormax Heartbeats Weekly Top 5 Chart!
பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான் நடிப்பில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள ‘கிங்’ (King) திரைப்படத்தின் “து மில் ஜாயே” (Tu Mil Jaaye) பாடல், ஆர்மேக்ஸ் ஹார்ட்பீட்ஸ் (Ormax Heartbeats) வெளியிட்டுள்ள வாராந்திர டாப் 5 பாடல்கள் பட்டியலில் முதலிடத்தைப் பிடித்து அசத்தியுள்ளது. வெளியானது முதலே ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பைப் பெற்று வரும் இப்பாடல், பல்வேறு இசை ஸ்ட்ரீமிங் தளங்களிலும் முன்னிலை வகித்து வருகிறது.
குறிப்பாக, இன்ஸ்டாகிராமில் இந்தப் பாடலின் ஹுக் ஸ்டெப்பை (Hook Step) ரசிகர்கள் பலரும் ரீல்ஸ்களாக உருவாக்கிப் பகிர்ந்து வருவதால், சமூக வலைதளங்களில் தொடர்ந்து டிரெண்டாகி வருகிறது.
‘கிங்’ திரைப்படத்தில் ஷாருக்கான் மற்றும் தீபிகா படுகோன் இணைந்து நடித்துள்ள “து மில் ஜாயே” பாடலில், இருவரின் அசத்தலான கெமிஸ்ட்ரி, மனதை வருடும் இசை மற்றும் கண்கவர் காட்சிகள் ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்துள்ளன. இவர்கள் இருவரும் மீண்டும் இணைந்து திரையில் தோன்றுவது ரசிகர்களிடையே கூடுதல் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
பாடல் தரவரிசையில் முதலிடத்தைப் பிடித்து தொடர்ந்து வரவேற்பைப் பெற்று வருவதால், திரைப்படத்தின் மீதான எதிர்பார்ப்பும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் ஷாருக்கான் நடிப்பில் உருவாகியுள்ள ‘கிங்’ திரைப்படம், வரும் டிசம்பர் 24, 2026 அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் பிரம்மாண்டமாக வெளியாகவுள்ளது.