RS Infotainment நிறுவனத்தின் சார்பில், எல்ரெட் குமார் தயாரிப்பில் வெளியாகியுள்ள படம், ‘விடுதலை’. இப்படத்தில் விஜய் சேதுபதி, சூரி, பவானிஸ்ரீ, கௌதம் வாசுதேவ் மேனன், ராஜீவ் மேனன், தமிழ், சேத்தன், மூணாறு ரமேஷ் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். வெற்றிமாறன் இயக்கியிருக்கிறார்.
‘இசைஞானி’ இளையராஜா இசையமைத்திருக்க, வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். பீட்டர் ஹெயின் சண்டைக் காட்சிகளை வடிவமைத்துள்ளார்.
எழுத்தாளர் ஜெயமோகன் எழுதிய ‘துணைவன்’ என்ற சிறுகதையைத் தழுவி வெளியாகியுள்ள ‘விடுதலை’ திரைப்படம் எப்படியிருக்கிறது?
அருமபுரி அருகேயுள்ள காட்டுப் பகுதியில் பதுங்கியிருக்கும் விஜய்சேதுபதி தலைமையிலான மக்கள் படையினர், ரயிலை வெடிவைத்து தகர்த்ததாக கூறபடும் நிலையில், அவர்களை பிடிக்க ஒரு போலீஸ் படை உருவாக்கப்படுகிறது. அதன் கமென்டிங் ஆபிசர் சேத்தன்.
போலீஸ் கான்ஸ்டபிள் சூரி காடு, மலைப்பிரதேசத்தில் சிறப்பாக ஜீப் ஓட்டும் திறமை பெற்றவர் அதனால், அருமபுரிக்கு மாற்றலாகி வருகிறார். சூது வாது தெரியாத நேர்மையாளர்.
கரடி கடித்து உயிருக்கு போராடும் மலை கிராமத்தை சேர்ந்த பெண்ணை, சூரி அவரது உயரதிகாரியின் கட்டளையை மீறி காப்பாற்றுகிறார். இதனால் சூரிக்கு தண்டனை கொடுக்கப்படுகிறது.
உயிர் தப்பிய கரடி கடித்த பெண்ணும் அவரது பேத்தி பவானிஶ்ரீ யும் சூரியிடம் நட்பாக பழக ஆரம்பித்த நிலையில், சூரி, பவானிஶ்ரீ இடையிலான நட்பு, காதலாக மாறுகிறது.
காட்டுப் பகுதிக்குள் மக்கள் படையினருக்கும், போலீஸ் தரப்புக்கும் இடையே நடக்கும் துப்பாக்கி சண்டையில் இரண்டு போலீஸார் கொல்லப்படுகிறார்கள். நிலைமை தீவிரமாகிறது. இதனால் அரசு தரப்பில் போலீஸ் டிஎஸ்.பி கௌதம் மேனன் பணியமர்த்தப்படுகிறார். அதன் பிறகு நடக்கும் ஒரு சண்டையில் மேலும் சில போலீஸார் கொல்லப்படுகிறார்கள். நிலைமை கட்டுக்கடங்காமல் போக, கிராமத்திலிருக்கும் ஆண்கள், பெண்கள் அனைவரையும் பிடித்து, போலீஸ் நிர்வாணப் படுத்தி சித்ரவதை செய்கிறது. அதில் சூரியின் காதலியான பவானிஶ்ரீயும் அந்த சித்ரவதைக்கு ஆளாகிறார்.
இந்நிலையில், சூரி பல தடங்கல்களை தாண்டி, விஜய்சேதுபதி இருக்கும் இடத்தை டி.எஸ்.பி கௌதம் மேனனிடம் சொல்கிறார். சூரியை பின் தொடரும் சிறிய போலீஸ் குழு விஜய் சேதுபதியை பிடித்ததா? அப்பாவி மக்கள் விடுவிக்கப்பட்டார்களா? என்பது தான், விடுதலை படத்தின் விறுவிறுப்பும், சுவாரஸ்யமும் நிறைந்த திரைக்கதை மற்றும் க்ளைமாக்ஸ்!
படம் ஆரம்பமான உடனேயே கதைக்குள் சென்றுவிடுகிறது. அதன் பிறகான அடுத்தடுத்தக் காட்சிகள், திரைக்குள் பயனிப்பதை போன்ற உணர்வினை ஏற்படுத்தி விடுகிறது.
விஜய்சேதுபதி, சூரி உள்ளிட்ட அனைத்து நடிகர், நடிகைகளும் வித்தியாசமான வேறுபட்ட நடிப்பினை கொடுத்து, கதாபாத்திரங்களுக்கு பலம் சேர்த்து இருக்கிறார்கள்.
சூரி க்ளைமாக்ஸ் காட்சியில் ரீலோட் பண்ணியபடி, தொடர்ந்து சுடும் காட்சியின் போது நல்ல பயிற்சி பெற்ற, சிறந்த துப்பாக்கி சுடும் வீரரை கண்முன் நிறுத்துகிறார். தேர்ந்த நடிப்பு. அவரது அப்பாவித் தனமான கதாபாத்திரம், சில இடங்களில் மெல்லிய சிரிப்பினை வரவழைக்கிறது.
தனது காதலி பவானிஸ்ரீ போலீஸில் சித்ரவதைப்படும் போது அவரை காப்பாற்ற உயரதிகாரிகளைத் தேடி ஓடுமிடத்தில் அவர் மீதும் அந்த பெண்களின் மீது பரிதாபம் ஏற்படுகிறது.
விஜய்சேதுபதியை பின்னல் இருந்து கட்டிப்பிடித்தபடி, அப்பாவித்தனமாக ‘அய்யா.. சரண்டராகிருங்க அய்யா.. எல்லாரையும் விட்ருவாங்க’ என விஜயசேதுபதியிடம் சூரி கெஞ்சும் காட்சியின் போது விஜய்சேதுபதி, சூரி இருவருமே மிகச்சிறந்த நடிப்பினை வெளிப்படுத்தியிருக்கிறார்கள்.
சூரியின் கதாபாத்திரம் வடிவமைக்கப்பட்ட விதமும், அவரது நடிப்பும் அனைவரையும் எளிதில் கவர்ந்து விடுகிறது.
சூரியின் காதலியாக நடித்திருக்கும் பவானிஸ்ரீ சிறப்பாக நடித்திருக்கிறார்.
திரைக்கதை, ஒளிப்பதிவு, இசையமைப்பு, சண்டை என அனைத்துவிதமான தொழில் நுட்பமும் சிறப்பாக ஒருங்கிணைக்கப் பட்டுள்ளது, படத்தின் வெற்றிக்கு காரணமாகிறது.
போலீஸ் கட்டமைப்பு, அதனை இயக்கும் அரசு அதிகாரிகளின் நடவடிக்கையினை சிறப்பாக வடிவமைத்துள்ளனர்.
நடிகர், நடிகைகளின் நடிப்பு, கதை, திரைக்கதை மற்ற அனைத்து விதமான தொழில்நுட்பங்களும் ஒருசேர சிறந்த பங்களிப்பினை கொடுத்த படமாக இருக்கிறது விடுதலை.
விடுதலை முதல் பாகம் 1 ல், முழுக்க முழுக்க சூரியின் தனிச்சிறந்த ஆளுமையின் கீழ்!
க்ளைமாக்ஸில் அம்மணமாக தரையில் உட்கார்ந்த படி விஜய் சேதுபதி, கௌதம் மேனனிடம் பேசும் காட்சி, விடுதலை பாகம் 2 – பார்க்கத் தூண்டுகிறது