விக்ரமின் 63வது திரைப்படத்தை, மடோன் அஷ்வின் இயக்கவிருக்கிறார்!

மண்டேலா மற்றும் மாவீரன் படங்களை இயக்கிய மடோன் அஷ்வின், சீயான் விக்ரம் நடிக்கும் படத்தினை இயக்கவிருக்கிறார். இப்படம் சியான் விக்ரமின் நடிப்பில் உருவாகும் 63 வது படமாகும். இப்படத்தினை அருண் விஸ்வா, ‘சாந்தி டாக்கீஸ்’ சார்பில் தயாரிக்கவிருக்கிறார்.

இப்படம் குறித்து, அருண் விஷ்வா கூறியதாவது..,

சியான் விக்ரம் நடிக்கவிருக்கும் 63வது திரைப் படத்தை, மண்டேலா மற்றும் மாவீரன் போன்ற சிறந்த படைப்புக்களை உருவாக்கிய மடோன் அஷ்வின் இயக்கவுள்ளார். அவரது தனித்துவமான கதை சொல்லும் திறன் எங்களை மீண்டும் அவருடன் இணைந்து பணியாற்ற தூண்டியுள்ளது.

எங்கள் மூன்றாவது தயாரிப்பை அறிவிப்பதில் மிக்க மகிழ்ச்சி மற்றும் பெருமை அடைகிறோம். கோடிக்கணக்கான மக்களை தனது நடிப்பின் மூலம் மகிழ்வித்து, மறக்க முடியாத கதாபாத்திரங்களையும் முன்னோடியான படங்களையும் வழங்கிய நடிகர் சியான் விக்ரமுடன் கை கோர்ப்பதில் மிகுந்த பெருமிதம் கொள்கிறோம்.

உலகளாவிய பார்வையாளர்களை கவரும் வகையில் உயர்தரமான ஒரு திரைப்படத்தை வழங்கும் உறுதியுடன் நாங்கள் இந்த பயணத்தை தொடங்குகிறோம். என கூறியிருக்கிறார்.