எல்.கே. அக்ஷய் குமார் – சுராஜ் வெஞ்சரமூடு இணையும் புதிய படம் தொடக்கம்!
LK Akshay Kumar and Suraj Venjaramoodu's Next Crime Drama Produced by Seven Screen Studio
‘சிறை’ திரைப்படத்தில் சிறப்பான நடிப்புத் திறனை வெளிப்படுத்தித் தனக்கென ஒரு ரசிகர் வட்டத்தை உருவாக்கியுள்ள இளம் நாயகன் எல்.கே. அக்ஷய் குமார் நடிக்கும் புதிய திரைப்படத்தின் படப்பிடிப்பு மற்றும் தொடக்க விழா இன்று காலை பூஜையுடன் சிறப்பாகத் தொடங்கியுள்ளது. கிரைம் டிராமா பாணியில் உருவாகும் இத்திரைப்படத்தின் முதற்கட்டப் படப்பிடிப்புகள் இன்று முதல் தொடர்ச்சியாக நடைபெறவுள்ளது.
தமிழ் சினிமாவின் முன்னணி தயாரிப்பு நிறுவனமான செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ (Seven Screen Studio) பேனரில் S. S. லலித் குமார் இத்திரைப்படத்தை தயாரிக்க, L. K. விஷ்ணு குமார் இணை தயாரிப்பாளராகப் பொறுப்பேற்றுள்ளார். தேசிய விருது பெற்ற பிரபல மலையாள நடிகர் சுராஜ் வெஞ்சரமூடு மற்றும் குணச்சித்திர நடிகர் சேத்தன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளனர்.

இத்திரைப்படத்தின் மூலம் விஷ்ணு அமரன் இயக்குநராகத் தமிழ் சினிமாவில் தனது புதிய கலைப் பயணத்தைத் தொடங்குகிறார். இவர் முன்னணி இயக்குநரான எச். வினோத்துடன் உதவி இயக்குநராகப் பல ஆண்டுகள் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ‘தீரன் அதிகாரம் ஒன்று’, ‘நேர்கொண்ட பார்வை’, ‘வலிமை’ மற்றும் ‘ஜனநாயகன்’உள்ளிட்ட திரைப்படங்களில் உதவி இயக்குநராகப் பணிபுரிந்தவர். இதன் காரணமாக இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.