ரக்ஷிதா மகாலட்சுமி, ஸ்வேதா டோரத்தி, சபரி, ரோஹிந்த், பவன் கிருஷ்ணா, சிங்கம்புலி, கே.எஸ்.ஜி.வெங்கடேஷ், எஸ்.சினேகா, குமாரி கனிஷ்கா, ஸ்ரீலேகா, பி.எல்.தேனப்பன், சிங்கம் புலி, புஜ்ஜிபாபு, சாம்ஸ் , அம்பானி சங்கர், முல்லை, கோதண்டம், எம்.எஸ். மூர்த்தி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள் எழுதி, தயாரித்து இயக்கியுள்ளார், எம்.எஸ். மூர்த்தி. ஒளிப்பதிவு, சேவிலோ ராஜா.
சபரியும், ரக்ஷிதா மகாலட்சுமியும் ஒரு அடுக்குமாடி குடியிருப்பில், 66 வது எண் கொண்ட வீட்டிற்கு குடியேறுகின்றனர். அதே குடியிருப்பில் 99 வது எண் கொண்ட வீட்டில் வசித்துவரும் ஸ்வேதா டோரத்தி கண்வனுடன் வசித்து வருகிறார். சில நாட்களில், ரக்ஷிதா மகாலட்சுமியும், ஸ்வேதா டோரத்தியும் நட்பாக பழகி கொள்கிறார்கள். ரக்ஷிதா மகாலட்சுமியை, அவரது கணவர் சபரி கொலை செய்ய முயற்சிக்கும் போது ஒரு அமானுஷய சக்தி, காப்பாற்றுகிறது. அதன் பிறகு, ஸ்வேதா டோரத்தியை ஒருவர் கொலை செய்ய முயற்சிக்கிறார். தோழியை காப்பாற்றும் நோக்கில் ரக்ஷிதா மகாலட்சுமி மற்ற குடியிருப்பு வாசிகளை அழைத்து கொண்டு, ஸ்வேதா டோரத்தியின் வீட்டிற்குள் செல்கிறார். அங்கு அப்படி ஒரு சம்பவமே நிகழவில்லை. குடியிருப்பு வாசிகள் ஸ்வேதா டோரத்தி எப்போதோ இறந்து விட்டார். என்கிறார்கள். அப்போது ஏன் என்னுடைய கண்களில் மட்டும் அந்தக்காட்சி தெரிந்தது. என நினைத்து குழப்பமடைகிறார், ரக்ஷிதா மகாலட்சுமி. இதன் பின்னணியில் நடந்தது என்ன, நடப்பது என்ன? என்பதுதான், 99 / 66 மீதிக்கதை.
திரைப்படத்தின் முதல் பாதி திரைக்கதை வழக்கமான ஒன்றாக இருப்பதால், சுவாரசியமில்லை. இரண்டாம் பாதி பரவாயில்லை. சாம்ஸ், முல்லை, கோதண்டம், சிங்கம்புலி ஆகியோரது காமெடிகள் படத்தின் பலவீனமாக இருக்கிறது. பவன் கிருஷ்ணா, கே.ஆர்.விஜயா, இயக்குநர் எம்.எஸ்.மூர்த்தி, பி.எல்.தேனப்பன் ஆகியோர் பரவாயில்லை! ரக்ஷிதா மகாலட்சுமி தனது அழகால் ஓரளவு வசீகரிக்கவும், பேயாக பயமுறுத்தவும் செய்கிறார். குணா, கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் சபரி கிடைத்த வாய்ப்பில் வில்லத்தனம் செய்கிறார். கரண், கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ரோஹிந்த் ஓரளவு நடித்துள்ளார்.
இசையமைப்பாளர் சௌந்தர்யனின் மகன் அமர் கீத், இப்படத்திற்கு பின்னணி இசையமைத்திருக்கிறார். பரவாயில்லை! ஒளிப்பதிவு, சேவிலோ ராஜா. பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களை தடுக்கவும், கடுமையான தண்டனைகள் கிடைக்கவும் வலியுறுத்தியுள்ளார், கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள் எழுதி இசையமைத்து இயக்கி தயாரித்திருக்கும் எம்.எஸ்.மூர்த்தி.