டார்க் (விமர்சனம்)  அலறவிடும் பக்கா ஹாரர் த்ரில்லர்!

தமிழ் சினிமாவுல வர்ற பேய் படம்னாலே பயமுறுத்துறாங்களோ இல்லையோ, மொக்கை காமெடி பண்ணி கடுப்பேத்துவாங்க. ஆனா, அதுக்கெல்லாம் ஒரு எண்ட் கார்டு போடுற மாதிரி, தியேட்டருக்குள்ள வர்ற ஆடியன்ஸை நிஜமாவே அலற வைக்க ஒரு பக்கா சைக்கலாஜிக்கல் ஹாரர் த்ரில்லரா வந்திருக்கு இந்த டார்க்

கே. பாக்யராஜ் சாருக்கு சொந்தமான ஒரு வாடகை வீடு. அங்க தங்கியிருந்த மூணு பசங்க ஒருத்தரை ஒருத்தர் கொடூரமா கொலை பண்ணிட்டு இறந்து போயிடுறாங்க. இந்த சம்பவத்துக்கு அப்புறம் அந்த வீட்டுப்பக்கம் போகவே எல்லாரும் பயந்து நடுங்குறாங்க. ஆனா, நம்ம ஹீரோ அஜய் கார்த்திக் கம்மி வாடகைக்கு கிடைக்குதேன்னு, அந்த பேய் பின்னணி தெரிஞ்சும் துணிச்சலா அந்த வீட்டுக்குள்ள குடி போறாரு.

ஆரம்பத்துல சீன் போடுற நம்ம ஹீரோ, போகப்போக அந்த வீட்டுக்குள்ள நடக்குற அமானுஷ்ய விஷயங்களை பாத்து பயத்தோட உச்சத்துக்கே போயிடுறாரு. ஒரு கட்டத்துல அவரே தனக்குத்தானே காயங்களை ஏற்படுத்திட்டு மர்மமான முறையில இறந்து போயிடுறாரு. அவரை தொடர்ந்து வீட்டு ஓனரான பாக்யராஜும் மரணமடையுறாரு. இந்த அடுத்தடுத்த விசித்திர மரணங்களை விசாரிக்க நம்ம நட்டி (நடராஜ் சுப்ரமணியன்) போலீஸ் ஆபீசரா களம் இறங்குறாரு. கேஸை விசாரிச்சுட்டு இருக்கும்போது ஒரு செம ட்விஸ்ட்! இறந்துட்டதா நினைச்ச ஹீரோ அஜய் திடீர்னு கண்ணை முழிச்சு, நட்டியோட பேரை சொல்லி எச்சரிச்சுட்டு திரும்பவும் மயங்கி விழுறாரு. முகம் தெரியாத ஒருத்தன் தன் பேரை சொன்னதை கேட்டு ஷாக் ஆகுற நட்டி, கேஸை அடுத்த லெவலுக்கு எடுத்துட்டு போறாரு. அந்த வீட்டுக்குள்ள இருக்குற அந்த மர்ம உண்மைகளும், பசங்களோட மரணத்துக்கு பின்னாடி இருக்குற சீக்ரெட்டும் தான் இப்படத்தோட விறுவிறுப்பான மீதிக்கதை!

ஃபர்ஸ்ட் ஹாஃப்ல ஒரு ஜாலி டைப் வாலிபனா வர்ற அஜய், அந்த பேய் வீட்டுக்குள்ள போனதுக்கு அப்புறம் மிரட்டலான நடிப்பை கொடுத்திருக்காரு. பயத்துல அவரோட உடம்பும் மனசும் எப்படி மாறுதுன்றதை செம கச்சிதமா காட்டி, தியேட்டர்ல இருக்குற நம்மளையும் சேர்த்து பயப்பட வச்சிருக்காரு.

ஒரு சாதாரண மரண வழக்கா விசாரிக்க ஆரம்பிச்சு, போகப்போக அதுல இருக்குற மர்மங்களை பாத்து மிரளுற சீன்ஸ்ல நட்டி தியேட்டர்ல ஸ்கோர் பண்றாரு. வீட்டு ஓனரா வர்ற நம்ம சீனியர் ஆக்டர் பாக்யராஜ், அவரோட மெச்சூர்டான ஆக்டிங் மூலமா இந்த கதையோட ஒரு முக்கியமான பில்லரா நிக்கிறாரு.

அஞ்சனா நேத்ரன், விடிவி கணேஷ், இந்துமதி மணிகண்டன், சிபி சக்கரவர்த்தி எல்லாரும் சின்ன ரோல் தான் என்றாலும் தங்களுக்கு கொடுத்த வேலையை பக்காவா செஞ்சிருக்காங்க.

ஒளிப்பதிவாளர் ரவி சக்தி, ஒரே வீட்டுக்குள்ள நடக்குற கதையை லைட்டிங் மேஜிக் மூலமா தியேட்டரை திகில்லா மாத்தியிருக்காரு. இருட்டையும், அந்த இருட்டுக்குள்ள ஏதோ ஒரு ஆபத்து இருக்குற மாதிரி கேமரா ஆங்கிள்ஸ் வச்சு நம்மள சீட் எட்ஜ்ல உட்கார வைக்கிறாரு.

படத்தோட விறுவிறுப்புக்கு மனு ரமேஷோட பிஜிஎம் (BGM) தான் பெரிய பிளஸ். தேவையில்லாம சத்தம் போடாம, சைலன்ஸையும் மெல்லிய ஒலிகளையும் மிக்ஸ் பண்ணி நம்ம ஹார்ட் பீட்டை எகிற வச்சிருக்காரு.

டைரக்டர் கல்யாண் கே. ஜெயன், லவ் சீன்ஸ், மொக்கை காமெடினு கதையை திசை திருப்பாம ஃபர்ஸ்ட் சீன்ல இருந்து கிளைமாக்ஸ் வரைக்கும் த்ரில்லர் மூடை மட்டுமே மெயின்டெய்ன் பண்ணி ஜெயிச்சிருக்காரு. நிஜமான ஒரு ஹாரர் எக்ஸ்பீரியன்ஸை என்ஜாய் பண்ண நினைக்குற த்ரில்லர் ரசிகர்களுக்கு ‘டார்க்’ ஒரு பெர்ஃபெக்ட் சாய்ஸ்!