யஷ் நடிப்பில், இந்திய சினிமாவே மிகவும் ஆவலோடு எதிர்பார்த்துக் காத்துக்கொண்டிருக்கும் திரைப்படம் டாக்ஸிக்: எ ஃபேரி டேல் ஃபார் க்ரோன்-அப்ஸ் (Toxic: A Fairy Tale for Grown-Ups). இத்திரைப்படத்தின் முதல் பாடலான ‘தபாஹி’-யின் அதிகாரப்பூர்வ மியூசிக் வீடியோ தற்போது வெளியாகி இணையத்தைக் கலக்கி வருகிறது.
திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ இசை கூட்டாளியான ‘ஜீ மியூசிக் கம்பெனி (Zee Music Company)’ மூலம் வெளியாகியுள்ள இந்த வீடியோ, ரசிகர்களுக்கு ஒரு செம விஷுவல் ட்ரீட்டாக அமைந்துள்ளது.யாஷ் – கியாராவின் அசாத்திய காதல் (On-screen Chemistry)ராக்கிங் ஸ்டார் யாஷ் மற்றும் கியாரா அத்வானி இருவரும் முதன்முறையாக இணைந்து நடித்துள்ள இப்பாடல், அவர்களின் அசாத்தியமான திரைப் பொருத்தம் (On-screen Chemistry) மற்றும் உணர்வுபூர்வமான நடிப்பால் ஒரு உன்னதமான காதலைக் கொண்டாடுகிறது. தங்களைச் சுற்றியிருக்கும் உலகத்தையே மறந்து, காதலின் ஆழமான மற்றும் தூய்மையான வடிவத்தை இருவரின் பாத்திரங்களும் வெளிப்படுத்துகின்றன.
இசையமைப்பாளர் விஷால் மிஸ்ராஇப்பாடல் குறித்துப் பேசியுள்ள இசையமைப்பாளர் விஷால் மிஸ்ரா (Vishal Mishra),
“‘தபாஹி’ என்பது வழக்கமான மெல்லிசை காதல் பாடல் அல்ல. இது ஒரு முழுமையான சரணாகதியாகவும், அலைபாயும் நெருப்பாகவும் இருக்கும் தீவிர காதலின் வடிவம். ‘டாக்ஸிக்’ திரைப்படத்திற்கு அத்தகைய வீரியமிக்க இசை தேவைப்பட்டது. திரையில் யாஷ் பாய் வெளிப்படுத்தும் அசாத்தியமான உறுதியை, இசையின் ஒவ்வொரு ஸ்வரத்திலும் கொண்டு வர முயன்றுள்ளேன். ஆறுதல் தருவதற்கு முன்பே நம்மை முழுமையாக ஆட்கொள்ளும் காதலின் கட்டுக்கடங்காத துடிப்புதான் இப்பாடலின் மையம்” என்று கூறியுள்ளார்.

‘தபாஹி’ பாடல் ஐந்து மொழிகளில் வெளியாகியுள்ளது. இசையமைப்பாளர் விஷால் மிஸ்ரா இசையமைத்துப் பாடியுள்ள இப்பாடலின் இந்தி வரிகளை ராஜ் சேகர் எழுதியுள்ளார். அனைத்து மொழி ரசிகர்களையும் கவரும் வகையில் இந்தியாவின் மிகச்சிறந்த பாடலாசிரியர்கள் தங்களின் சொந்த மொழிகளில் வரிகளை வடித்துள்ளனர்:தமிழ்: விக்னேஷ் சிவன்கன்னடம்: யோகராஜ் பட்தெலுங்கு: ராமஜோகைய்யா சாஸ்திரிமலையாளம்: ரஃபீக் அகமதுபிரம்மாண்ட நட்சத்திர பட்டாளம் மற்றும் தொழில்நுட்பக் கூட்டணி (Cast & Crew)டாக்ஸிக் திரைப்படத்தில் திரையுலகின் முன்னணி நட்சத்திரங்கள் பலர் இணைந்து நடித்துள்ளனர்.
ராக்கிங் ஸ்டார் யாஷ் உடன் இணைந்து நயன்தாரா, கியாரா அத்வானி, தாரா சுதாரியா, ருக்மிணி வசந்த் மற்றும் ஹுமா குரேஷி உள்ளிட்ட பெரும் நட்சத்திர பட்டாளமே இப்படத்தில் வலம் வரவுள்ளனர்.இப்படத்தின் கதையை யாஷ் மற்றும் கீது மோகன்தாஸ் இணைந்து எழுத, கீது மோகன்தாஸ் இத்திரைப்படத்தை இயக்கியுள்ளார். கன்னடம் மற்றும் ஆங்கில மொழிகளை முதன்மையாகக் கொண்டு உருவாகும் இப்படம், தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் டப்பிங் செய்யப்பட்டு உலகளாவிய வெளியீட்டிற்குத் தயாராகி வருகிறது. இத்திரைப்படம், ஆகஸ்ட் 26 தேதி வெளியாகிறது.