உருக வைக்கும் சித் ஸ்ரீராம் குரல்..!” – ‘அன்பில் அவன்’ பட மெகா சர்ப்ரைஸ் மெலடி!

"Sid Sriram's Vocals Will Melt Your Heart!" - Ashok Selvan's Anbil Avan Drops Beautiful Second Single 'Kalla Nikkiriye'!

முன்னணி இளம் நடிகர் அசோக்செல்வன் நடிப்பில், ஆர்.கார்த்திகேயன் இயக்கத்தில் உருவாகி வரும் ‘அன்பில் அவன்’ திரைப்படத்தின் இரண்டாவது பாடலான “கல்லா நிக்கிறியே” வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.

அழகான காதல் கதையாக உருவாகி வரும் இப்படத்திற்காக கோவிந்த் வஸந்தா இசையில் உருவாகியுள்ள “கல்லா நிக்கிறியே” பாடலுக்குப் பாடலாசிரியர் கார்த்திக் நேத்தா வரிகளை எழுதியுள்ளார். பாடலை சித் ஸ்ரீராம் தனது தனித்துவமான குரலில் பாடியுள்ளார்.

முதல் சிங்கிளான “ஆசை வரமே” காதலின் நெருக்கத்தையும், இனிமையான காதல் தருணங்களையும் அழகாகப் பதிவு செய்திருந்த நிலையில், “கல்லா நிக்கிறியே” காதலின் மற்றொரு பக்கத்தைப் பேசுகிறது.

காதலின் வலி, காதலியின் பெருமை, பிரிவின் ஏக்கம் என உணர்வுகளைத் தாங்கி நிற்கும் இப்பாடல், காதல் உலகிற்குள் கேட்பவர்களை மெல்ல இழுத்துச் செல்கிறது. கார்த்திக் நேத்தாவின் வரிகள் காதலின் ஆழமான உணர்வுகளை அழகாகக் கடத்த, கோவிந்த் வஸந்தாவின் இசை அந்த உணர்வுகளுக்கு உயிர் கொடுக்கிறது. குறிப்பாகச் சித் ஸ்ரீராமின் உணர்வுப்பூர்வமான குரல், பாடலின் ஒவ்வொரு வரியையும் மனதுக்குள் ஊடுருவச் செய்கிறது. காதலின் வலியை உணர்ந்தவர்களின் மனதில் இப்பாடல் நிச்சயம் ஒரு நீண்ட தாக்கத்தை ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளது.

இப்பாடல்  இசை ரசிகர்களிடையே கூடுதல் கவனத்தை ஈர்த்து, இணையத்தில் வைரலாகி வரும் இந்த பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ள ‘அன்பில் அவன்’ திரைப்படத்தில் அசோக் செல்வன் மற்றும் ப்ரீத்தி முகுந்தன் முதன்மை ஜோடியாக நடிக்க, சபு மோன், அப்துல் சமத், கதிர் பாலு, மஹா டெல்லி கணேஷ் உள்ளிட்ட ஒரு மிரட்டலான நட்சத்திர பட்டாளமே இணைந்து நடித்துள்ளது.

பாக்ஸ் ஆபீஸில் அசுர வசூல் சாதனை படைத்த ‘போர் தொழில்’ திரைப்படத்தின் இயக்குநர் விக்னேஷ் ராஜா இப்படத்திற்கு விறுவிறுப்பான கதையை எழுதியுள்ளார். கௌதம் ராஜேந்திரன் தனது நேர்த்தியான கேமரா மூலம் ஒளிப்பதிவை மேற்கொள்ள, கோவிந்த் வஸந்தா இசையமைக்கிறார்.

இப்படத்தை ஐங்கரன் இன்டர்நேஷனல் மற்றும் ஹேப்பி ஹை பிக்சர்ஸ் நிறுவனங்கள் சார்பில் தயாரிப்பாளர்கள் கே. கருணா மூர்த்தி, அசோக் செல்வன் மற்றும் அபிநயா செல்வம் ஆகியோர் இணைந்து பிரம்மாண்டமாகத் தயாரித்துள்ளனர்.

சினிமா ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள ‘அன்பில் அவன்’ திரைப்படம் வரும் செப்டம்பர் மாதம் 25 ஆம் தேதி உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் வெளியாக உள்ளது.