சௌந்தர்யா ரஜினிகாந்தின் ‘கமல் ஸ்ரீதேவி’ படத் தயாரிப்பு அப்டேட்!
Soundarya Rajinikanth's Next Movie Update
தமிழ் சினிமாவில் மாறுபட்ட கதைக்களங்களைக் கொண்ட திரைப்படங்களைத் தயாரித்து ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்று வரும் நிறுவனம் எம்ஆர்பி எண்டர்டெயின்மெண்ட் (MRP Entertainment). இந்நிறுவனத்தின் தயாரிப்பில் வெளியான ‘குட் நைட்’, ‘லவ்வர்’, ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ மற்றும் அண்மையில் வெற்றி பெற்ற ‘வித் லவ்’ ஆகிய திரைப்படங்களின் தொடர் வெற்றிகளைத் தொடர்ந்து, தங்களது அடுத்த தயாரிப்பாக ‘கமல் ஸ்ரீதேவி’ திரைப்படத்தை உருவாக்கி வருகின்றனர். இப்படத்தை சைன் ஃபிலிம்ஸ் (Zion Films) சார்பில் சௌந்தர்யா ரஜினிகாந்த் இணைந்து வழங்குகிறார். தற்போது இத்திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ தலைப்பு வெளியாகி ரசிகர்களிடையே மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், படத்தின் முக்கியத் தொழில்நுட்பக் கலைஞர்களின் விபரங்களைப் படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.
இத்திரைப்படத்தின் விளம்பரப் புகைப்படப் பணிகளை கேமரா செந்தில் மேற்கொள்ள, மணியன் படப்பிடிப்புத் தளப் புகைப்படப் பணிகளைக் (Still Photographer) கவனிக்கிறார். R.J. சுரேஷ் குமார் இப்படத்தின் தயாரிப்பு மேலாளராகப் பணியாற்றுகிறார். தமிழ் சினிமாவின் முன்னணி விளம்பர வடிவமைப்பாளரான கோபி பிரசன்னா இப்படத்தின் போஸ்டர் மற்றும் விளம்பர வடிவமைப்புகளை மேற்கொள்கிறார். திரையரங்குகளில் ரசிகர்களுக்குச் சிறந்த ஒலி அனுபவத்தைத் தரும் நோக்கில் சுரேன் ஜி மற்றும் அழகியகூத்தன் ஆகிய இருவரும் ஒலி வடிவமைப்பாளர்களாகப் (Sound Design) பணியாற்றுகின்றனர்.
மேலும், இப்படத்தின் இயக்கப் பிரிவில் சிவகாந்த் தலைமை இணை இயக்குநராகவும், தினேஷ்.E இணை இயக்குநராகவும் பணிபுரிகின்றனர். படத்தின் மக்கள் தொடர்புப் பணிகளை (PRO) யுவராஜ் கவனிக்கிறார். பிரம்மாண்டமாக உருவாகும் இத்திரைப்படத்தின் எக்சிகியூட்டிவ் தயாரிப்பாளராக பிரசாந்த் செயல்பட, சரத் J. சாமுவேல் இணைத் தயாரிப்பாளராகப் பணியாற்றுகிறார். பிரபுதேவா மற்றும் சிம்ரன் முதன்மைக் கதாபாத்திரங்களில் நடிக்கும் இத்திரைப்படத்தின் தலைப்பு மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்களின் விபரங்கள் அடுத்தடுத்து வெளியாகி வருவதால், படத்தின் டீசர் மற்றும் அடுத்தகட்ட அறிவிப்புகள் குறித்த ஆர்வம் சினிமா ரசிகர்களிடையே மேலும் அதிகரித்துள்ளது.