‘லவ் 3.0’ பட  இயக்குநராக உயர்ந்த இன்ஸ்டா பிரபலம் ஆர்னிகா!

Arnika Inspires Netizens With Her Powerful Speech On Self Motivation And Audition Failures

‘லவ் 3.0’ திரைப்படத்தின் பிரம்மாண்ட மோஷன் போஸ்டர் வெளியீட்டு விழாவில், படத்தின் கதாநாயகியும் இயக்குநருமான ஆர்னிகா தனது அசாத்திய போராட்டக் குணத்தை விவரித்துப் பேசுகையில்,

நமது வாழ்க்கையில் ஏதேனும் ஒரு விஷயம் தொடர்ந்து தாமதமாகிக் கொண்டே இருக்கிறது என்றால், அது நமக்கான ஒரு மிகப்பெரிய நல்ல விஷயத்திற்காகத்தான் அப்படிச் செல்கிறது என்பதைத் தான் முழுமையாக உணர்ந்துள்ளதாகத் தெரிவித்தார் “நாம் வாய்ப்பு கேட்டுப் பல தயாரிப்பாளர்கள் மற்றும் இயக்குநர்களின் படிகள் ஏறிக்கொண்டிருந்த காலம் மாறி, இன்று நான் ஒரு பிரதான நடிகையாகவும், ஒட்டுமொத்தப் படத்தை இயக்கும் இயக்குநராகவும் இந்த மேடையில் நின்று கொண்டிருப்பதை எனது வாழ்வின் ஆகப்பெரிய வெற்றியாக நினைக்கிறேன்” என்று அவர் நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார்.

மேலும் தொடர்ந்து பேசிய அவர், “நமது வாழ்க்கைக்கு எது தேவைப்படுகிறது என்றாலும், அதை நாம்தான் களத்தில் இறங்கிச் செய்ய வேண்டும். வேறு யாரும் நமக்காக உதவி செய்ய வரமாட்டார்கள். நாம் ஒன்றை அடைவதற்கு நாம்தான் தொடர்ந்து முயல வேண்டும், போராட வேண்டும். அப்படிப் போராடி வந்து நான் நின்று இருக்கும் இந்த மேடையை ஒரு தகுதியான வெற்றியாகத்தான் பார்க்கிறேன்” என்று கூறினார்.

இன்ஸ்டாகிராமில் தங்களது ரீல்ஸ் (Reels) வீடியோக்களைப் பார்த்துப் பாராட்டிய ஒட்டுமொத்த டிஜிட்டல் மக்கள், தங்களின் இந்த முதல் முழுநீளத் திரைப்பட முயற்சிக்கும் தியேட்டர்களில் பேராதரவு தருவார்கள் என்று தான் நம்புவதாகவும், காலத்திற்கு ஏற்றவாறு மக்களைச் சந்தோஷப்படுத்தும் ஒரு புதுமையான உலகத்தை இதில் படைத்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

இதுநாள் வரை திரையரங்குகளில் கூட்டத்திற்குள் ஒருத்தியாக அமர்ந்து கொண்டு முன்னணி கதாநாயகர்களுக்குக் கைதட்டிக் கொண்டிருந்த தான், இன்று இந்த உயரத்திற்கு வந்துள்ளதாகக் குறிப்பிட்ட ஆர்னிகா, இந்தத் திரைப்படத்தின் மூலம் தனக்கு ஒரு நல்வாய்ப்பைக் கொடுத்தால், சினிமா வாய்ப்புகளுக்காக வெளியுலகில் அலைந்து திரியும் பல ஏழைத் திறமைசாலிகளை திரையுலகிற்குள் கொண்டு வருவேன் என்று உறுதியளித்தார். தான் பல இடங்களுக்கு வாய்ப்பு தேடி அலைந்ததால் அதன் வலி தனக்கு நன்றாகத் தெரியும் என்றும், என்னைப் போன்ற புதியவர்களுக்கு வாய்ப்பு கிடைக்க மக்கள் ஒரு சின்ன வாய்ப்பை அளிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்ட போது அவரது கண்கள் கலங்கி மேடையிலேயே அழுதுவிட்டார். இந்த விழாவில் படக்குழுவினருடன் சிறப்பு விருந்தினர்களும் கலந்துகொண்டு புதுமுகக் கலைஞர்களைத் தங்களது வாழ்த்துகளால் கௌரவித்தனர்.