‘அன்பில் அவன்’! – Sony LIV தளத்தில் ஸ்ட்ரீமிங்!
Ashok Selvan & Preethi Mukundhan’s ‘Anbil Avan’ Locks OTT Release Date!
காதல், சஸ்பென்ஸ் மற்றும் ஆக்ஷன் என உணர்வுப்பூர்வமான கதைக்களத்துடன் உருவாகியுள்ள ‘அன்பில் அவன்’ திரைப்படம், திரையரங்குகளில் பெற்ற வெற்றிகரமான வரவேற்பைத் தொடர்ந்து வரும் நவம்பர் 20-ம் தேதி முதல் Sony LIV ஓடிடி தளத்தில் பிரத்தியேகமாக வெளியாகிறது.
அசோக் செல்வன் மற்றும் ப்ரீத்தி முகுந்தன் இணைந்து நடித்துள்ள இப்படம், சூர்யா மற்றும் இயல் என்ற காதல் ஜோடியின் வாழ்க்கையை மையமாகக் கொண்டுள்ளது. ஒன்றாக இணைந்து அழகான எதிர்காலத்தை உருவாக்க வேண்டும் என்ற கனவுடன் வாழும் இவர்களின் வாழ்க்கையில், எதிர்பாராத சம்பவங்கள் அடுத்தடுத்து நிகழ்கின்றன. அவர்களின் உலகமே தலைகீழாக மாறும் சூழலில், காதல், நம்பிக்கை மற்றும் மன உறுதி ஆகியவை கடுமையான சோதனைக்கு உள்ளாகின்றன. தான் நேசிக்கும் ஒருவருக்காக ஒருவர் எந்த எல்லை வரை செல்லத் தயாராக இருப்பார் என்பதை விறுவிறுப்பான திரைக்கதையுடன் இப்படம் பேசுகிறது.
இப்படம் குறித்து நடிகரும் தயாரிப்பாளருமான அசோக் செல்வன் கூறுகையில், “இரண்டு பேர் ஒன்றாக இணைந்து தங்களுக்கான வாழ்க்கையை உருவாக்கிக்கொள்ள விரும்பும்போது, கற்பனை செய்துகூடப் பார்க்க முடியாத சூழ்நிலைகளில் சிக்கிக்கொள்வதே இப்படத்தின் அடிப்படைக் கதை. நடிகராக மட்டுமின்றி தயாரிப்பாளராகவும் பணியாற்றியது எனக்கு இந்தப் பயணத்தை மேலும் சிறப்பானதாக்கியது. திரையரங்குகளில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ள நிலையில், தற்போது Sony LIV மூலம் இன்னும் அதிகமான ரசிகர்களைச் சென்றடைய இருப்பது மகிழ்ச்சியளிக்கிறது” என்றார்.
ஆர். கார்த்திகேயன் இயக்கியுள்ள இப்படத்திற்கு விக்னேஷ் ராஜா கதை எழுதியுள்ளார்; இவர்களுடன் அசோக் செல்வனும் இணைந்து திரைக்கதை அமைத்துள்ளார். சபுமோன் அப்துசமத், கதிர்பாலு, மஹா டெல்லி கணேஷ் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். ஹேப்பி ஹை பிக்சர்ஸ் சார்பில் அசோக் செல்வன் மற்றும் அபிநயா செல்வம் தயாரித்துள்ள ‘அன்பில் அவன்’ திரைப்படத்தை வரும் நவம்பர் 20 முதல் Sony LIV தளத்தில் காணலாம்.