“பிஜிஎம்-மும் சரி, எடிட்டிங்கும் சரி.. பெரிய ஏமாற்றம்!” – ‘சர்தார் 2’ விமர்சனம்!

Painfully Long with Bad VFX and Forced Comedy: Why Sardar 2 Fails to Live Up to the Expectations of the Franchise!

கார்த்தி ரெண்டு கெட்டப்ல நடிச்சு, பி.எஸ்.மித்ரன் டைரக்ஷன்ல வந்திருக்க ‘சர்தார் 2’ படம், எப்படியிருக்கு? பார்க்கலாம்.

கதை என்னன்னு பார்த்தா, நம்ம கார்த்தி இதுல விஜய்னு ஒரு ரா (RAW) ஆபீசரா வராரு. உலகத்தையே அழிக்கப் போற பயங்கரமான ஒரு பயோ-வெப்பனை (உயிரியல் ஆயுதம்) ஏவத் திட்டமிடுற வில்லன் எஸ்.ஜே.சூர்யாவை விஜய் எப்படித் தடுத்து நிறுத்துறாரு, இதுக்கு அவரோட அப்பாவான பழைய சர்தாரோட உளவு பின்னணி எப்படி உதவுதுங்கிறதுதான் படத்தோட பேசிக் ஒன்லைன்.

நடிப்பு பத்தி சொல்லணும்னா, அப்பாவா மகனான்னு ரெண்டு வேடத்துல கார்த்தி வந்தாலும், இந்த தடவை அவரோட நடிப்புல பெருசா சொல்றதுக்கு ஒண்ணுமில்ல. ஒரு உளவு ஆபீசருக்கான அந்த சுறுசுறுப்பும் மிடுக்கான பாடியும் அவரோட கேரக்டர்ல சுத்தமா மிஸ் ஆகுது. ஆனா கார்த்தியோட அந்த மாஸான ஸ்கிரீன் பிரசன்ஸ் மட்டும் தான் படத்துக்கு பெரிய பிளஸ்.

ஹீரோயின் ஆஷிகா ரங்கநாத் பாக்குறதுக்கு வேணா அழகா இருக்காங்களே தவிர, அவங்களுக்குப் பெருசா சீன் எதுவும் இல்ல. வில்லனா வர்ற எஸ்.ஜே.சூர்யா பல இடங்கள்ல ஓவரா கத்தி அலறி நடிச்சு நமக்கு சலிப்ப ஏற்படுத்துறாரு. யோகி பாபுவோட காமெடி எல்லாம் இந்த படத்துல சுத்தமா வொர்க் அவுட்டே ஆகல. பிளாஷ்பேக் சீன்ல வர்ற மாளவிகா மோகனனோட நடிப்பு மட்டும் தான் ஓரளவுக்குப் பரவாயில்லைனு சொல்ல வைக்குது.

டெக்னிக்கலா பார்த்தா, படத்தோட பெரிய வில்லனே இதோட எடிட்டிங் தான். படம் ரொம்ப இழுவையா போறதால செம லேக் அடிக்குது. செகண்ட் ஹாஃப்ல ஒரு 15 நிமிஷத்தையாவது கட் பண்ணி தூக்கியிருந்தா படம் கொஞ்சம் சுவாரசியமா நகர்ந்திருக்கும்.

சாம் சி.எஸ் போட்டிருக்க பிஜிஎம் (BGM) பல ஹாலிவுட் படங்களோட மியூசிக்கை நமக்கு ஞாபகப்படுத்துது. படத்தோட கிராபிக்ஸ் (VFX) ரொம்ப மொக்கையா இருக்குப்பா; ‘கிரீன் ஸ்கிரீன்’ வச்சு எடுத்திருக்காங்கனு சாதாரண மக்களே ஈஸியா கண்டுபிடிச்சிடலாம்.

ஆனா, இந்தியர்கள் இந்த ஆன்டிபயாடிக் மருந்துகளைத் தப்புத் தப்பா பயன்படுத்துறதை பத்தி எஸ்.ஜே.சூர்யா பேசுற அந்த ஒரு சீன் மட்டும் நிஜமாவே வேற லெவல்ல செம மாஸா இருக்கு. ப்ரொடியூசர்ஸ் கோடிக்கணக்குல காசை கொட்டி பிரம்மாண்டமா படத்தை எடுத்திருந்தாலும், சுவாரசியமில்லாத திரைக்கதையால ‘சர்தார் 2’ தியேட்டர்ல ஒரு சுமாரான அனுபவமா தான் முடியுது.

மொத்தத்துல, ப்ரொடியூசர்ஸோட மெயின் வில்லனே இந்தப்படத்தோட டைரக்ட்டரு பி.எஸ்.மித்ரன் தான்!!!