ஈரம் படத்தினை தொடர்ந்து, பயமுறுத்த வரும் ‘சப்தம்’!

ஈரம் படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானவர், அறிவழகன். இவர் தனது முதல் படத்திலேயே ரசிகர்களின் தனி கவனத்தினை பெற்றார். தற்போது, ஆல்பா ஃப்ரேம்ஸ் சார்பில் இயக்குனர் அறிவழகன் மற்றும் 7ஜி ஃபிலிம்ஸ் சிவா இணைந்து தயாரிக்க, இயக்குனர் அறிவழகன் இயக்கத்தில், நடிகர் ஆதி நடிக்கும் ‘சப்தம்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது.

ஹாரர் திரில்லராக உருவாகியிருக்கும் சப்தம் திரைப்படத்தில், சிம்ரன், லைலா, லட்சுமி மேனன், ரெடின் கிங்ஸ்லி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படத்தின் கதாநாயகனாக ஈரம் படத்தில் நடித்த ஆதி நடித்துள்ளார்.

ஈரம் படத்திற்கு பிறகு அறிவழகனும், ஆதியும் மீண்டும் ஒரு ஹாரர் திரில்லர் படத்தில் இணைந்திருப்பது, எதிர்பார்ப்பினை உருவாக்கியுள்ளது. ஈரம் படத்திற்கு இசையமைத்த இசையமைப்பாளர் தமன், இப்படத்திற்கும் இசையமைக்கிறார்.

விரைவில் சப்தம் படத்தின் போஸ்டர், டீஸர் மற்றும் டிரெய்லர் பற்றிய அறிவிப்புகளை படக்குழுவினர் வெளியிட இருக்கிறார்கள்.