தமிழக முதல்வரிடம் கோரிக்கை வைத்த நடிகர் விஜய்!

கைதி படத்தை இயக்கிய லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகியிருக்கும் ‘மாஸ்டர்’ படம்  வருகிற ஜனவரி 13 ல் வெளியிடத் தயாராகவுள்ளது.  

தமிழகத்தின் திரையரங்குகளில் 50% இருக்கைகளுக்கு மட்டுமே அனுமதிக்கப்பட்டு சிறிய பட்ஜெட்டில் தயாரான சில படங்கள் வெளியாகி வருகின்றன.

இந்நிலையில் நடிகர் விஜய்யின் ‘மாஸ்டர்’ படம் மிகப்பெரும் பட்ஜெட்டில் உருவாகியுள்ளது. 100% இருக்கைகளுக்கு அனுமதி கிடைத்தால் மட்டுமே படத்தின் தயாரிப்பு செலவினை ஈடுசெய்யமுடியும்  என்பதால், நேற்றிரவு (டிசம்பர் 27) க்ரீன்வேஸ் சாலையில் உள்ள தமிழக முதல்வரின் இல்லத்தில்  முதல்வர் எடப்பாடி பழனிசாமியை நடிகர் விஜய் சந்தித்துள்ளார்.

இந்தச் சந்திப்பின்போது ‘மாஸ்டர்’ படத்துக்காக 100% இருக்கைகளுக்கு அனுமதியும், சிறப்புக் காட்சிக்கான அனுமதியும் அளிக்க வேண்டும் என்று விஜய் கோரிக்கை வைத்துள்ளார். இது குறித்து பரிசீலனை செய்வதாக முதல்வர் கூறியிருப்பதாக தெரிகிறது.

கொரோனா அச்சுறுத்தல் சற்றே தனிந்துள்ள நிலையில் லண்டனில் மீண்டும் வேகமெடுத்துவரும் நிலையில் உலக நாடுகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பல தடைகளை பிறப்பித்து வருவது குறிப்பிடடதக்கது.