சாதியப் படங்களுக்கு ஓய்வு கொடுக்க வரும் ‘சிவகாமி’.

அன்மைக்காலமாக சாதியப் படங்களாக வெளிவந்து கொண்டிருக்கும் நிலையில், தெலுங்கில்  பெரும் வெற்றி பெற்ற ‘நானி’ படத்தை தமிழில் ‘சிவகாமி’ என்ற பெயரில் மொழிமாற்றம் செய்து விரைவில்  வெளியிடவுள்ளனர்.

தமிழ் சினிமா பாக்ஸ் ஆபிஸில் தனி இடம் பிடித்து வந்த ஆவி, சாமி படங்கள் மீண்டும் களமிறங்கவுள்ளன. அதன் தொடர்ச்சியாக ஆவிகள், பேய்களை அடக்கும்  ‘அம்மன்’ படமாக  “சிவகாமி” திரைப்படம் வெளியாகிறது. இந்தப்படத்தை ஜே எம் பஷீர், MD Cinemas AM.சௌத்ரி இணைந்து “சிவகாமி” படத்தை வெளியிடுகிறார்கள்.

இந்தப்படம் வெற்றிபெற்று மீண்டும் இந்த மாதிரியான படங்கள் ஆபிஸில் இடம் பிடிக்கும். என்கின்றனர் படக்குழுவினர்.

இப்படத்தின் இசை வெளியீட்டில் பேசிய பவர் ஸ்டார் சீனிவாசன்

‘சிவகாமி படம் பார்த்தேன் நல்லாயிருக்கு நிச்சயம் வெற்றி பெரும்..’ரஜினி சார்.. சீக்கிரம் கட்சி ஆரம்பியுங்கள்.. அப்படியே என்னை துணை முதல்வர் ஆக்கி விடுங்கள்’. இல்லை என்றால் நான் கட்சி ஆரம்பித்து விடுகிறேன் அதில் நீங்கள் சேர்ந்து கொள்ளுங்கள்’ என்றார்.

ரஜினி இன்னும் எத்தனை நாட்களுக்கு இந்த மாதிரியான ஆட்களிடம் வசை படுவாரோ?