திருநெல்வேலி மாவட்டம் முழுவதும் தலைக்கவசத்தின் முக்கியத்துவத்தை பற்றி பொதுமக்களுக்கு எடுத்துரைக்கும்படி காவல் நிலைய அதிகாரிகளுக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.அருண்சக்தி குமார் இ.கா.ப அவர்கள் உத்தரவிட்டார்.
அதன் ஒரு பகுதியாக சிந்தாமணி பேருந்து நிலையம் அருகே வாசுதேவநல்லூர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் திரு.சண்முகவேல் அவர்கள்; பொதுமக்கள் தலைகவசம் அணியாததால் ஏற்படும் உயிர் இழப்புகள் பற்றியும்¸ தலைகவசத்தின் முக்கியத்துவதை பற்றியும்¸ சீட்பெல்ட் அணிதல்¸ மது அருந்தி வாகன ஒட்டுதல் கூடாது போன்ற அறிவுரைகளை வழங்கினார்.
இவ்விழிப்புணர்வு பதிவு சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.