ஜெய்யின் ‘கேப்மாரி’ யாவது தேறுமா?

படத்தின் கதைக்கும், தலைப்புக்கும் சம்பந்தமில்லாமல் தலைப்பு வைத்து கவனத்தை மட்டுமே பெறும் இயக்குனர்கள் கூட்டத்தில் பல புரட்சிப் படங்களை இயக்கிய இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகரும் இணைந்து கொண்டது தான் துரதிர்ஷ்டம். இவர் தனது 70 ஆவது படமாக இயக்கிவரும் படத்திற்கு ‘கேப்மாரி’ என பெயரிடப்பட்டு விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

வரிசையாக தோல்விப்படங்களாக கொடுத்து வரும் நடிகர் ஜெய்க்கு ‘கேப்மாரி’ 25 வது படம். அவருக்கு ஜோடியாக வைபவி சான்ட்லியா, அதுல்யா ரவி இருவரும் நடித்து வருகிறார்கள். இந்தப்படத்தின் பாடல் காட்சி சென்னை M.G.R. பிலிம் சிட்டியில் அமைக்கப்பட்டுள்ள பிரம்மாண்ட அரங்கில் ‘தெறி’, ‘பேட்டை’ படங்களுக்கு நடனம் அமைத்த ஷெரிஃப்  5 0  மும்பை நடன அழகிகளை வைத்து நடனம் அமைத்து வருகிறார். ஜெய் மிகுந்த சிரத்தை எடுத்து நடனமாடி வருவதாகவும் இந்தப்பாடல் படத்தின் சிறப்பான பாடலாக அமையும் என்கிறார்கள் படக்குழுவினர்கள்.