நடிகரும், முன்னாள் ஐ.பி.எஸ் அதிகாரி ரமேஷ் குடவாலாவின் மகனுமான விஷ்ணு விஷால், காதல் மனைவியிடம் விவாகரத்து, காமெடி நடிகர் சூரியிடம் நில மோசடி வழக்கு. தற்போது குடியிருப்பு வாசிகளிடம் குடிபோதையில் கலாட்டா என தொடர்ந்து அவர் சர்ச்சையில் சிக்கி வருகிறார்.
கோட்டூர் புரத்தில் உள்ள ஒரு அபார்ட்மென்ட்டில் வசித்து வரும் நடிகர் விஷ்னு விஷால், குடித்துவிட்டு ரகளையில் ஈடுபடுவதாக அவர் மீது, அந்த அபார்ட்மென்ட்டின் செக்ரடரி, காவல்துறை கூடுதல் ஆணையரிடம் புகார் அளித்திருக்கிறார்.
விஷ்ணு விஷால் ராணா டகுபதியுடன் ‘காடன்’ படத்தில் நடித்துள்ளார். பிரபு சாலமன் இயக்கத்தில் ‘ஈரோஸ் இன்டர்நேஷனல்’ நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படம் விரைவில், வெளியாகவுள்ளது.