சாம் சி.எஸ் இசையில், இந்தியா ஃபிலிம் கம்பெனி தயாரிக்கும் குடும்பப் பொழுதுபோக்குப் படம்!

Sam CS to Score Music for Vaali Mohan Das’s Upcoming Film

‘ரங்கோலி’ மற்றும் ‘மெட்ராஸ்காரன்’ ஆகிய திரைப்படங்களை இயக்கி கவனம் ஈர்த்த இயக்குநர் வாலி மோகன் தாஸ் இயக்கத்தில் உருவாகி வரும் புதிய திரைப்படமான ‘புரொடக்ஷன் நம்பர் 01’ (Production No. 01) படத்தின் முதல் கட்டப் படப்பிடிப்பு தற்போது பரபரப்பாக நடைபெற்று வருகிறது. இந்தியா ஃபிலிம் கம்பெனி, ஸ்ரீ சுமனோஹரா புரொடக்ஷன்ஸ் மற்றும் கிராட்டிட்யூட் புரொடக்ஷன்ஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து இப்படத்தைத் தயாரிக்கின்றன.

இந்தியா ஃபிலிம் கம்பெனியின் முதல் திரைப்படத் தயாரிப்பாக உருவாகும் இப்படத்தில் தேஜய் அருணாசலம் கதாநாயகனாக நடிக்க, திவிஜா பிரபாகர் கதாநாயகியாக அறிமுகமாகிறார். அனைத்து வயதினரும் குடும்பத்துடன் அமர்ந்து ரசிக்கும் வகையில், அனைத்துத் தரப்பு ரசிகர்களையும் கவரும் முழுமையான குடும்பப் பொழுதுபோக்குத் திரைப்படமாக இது உருவாகி வருகிறது.

இப்படத்தை வாலி மோகன் தாஸ் தயாரித்து இயக்குவதுடன், உமர் எஸ். உடன் இணைந்து எழுத்துப் பணிகளையும் மேற்கொண்டுள்ளார். இப்படத்திற்கு சாம் சி.எஸ். இசையமைக்க, மூத்த ஒளிப்பதிவாளர் ஆர்தர் ஏ. வில்சன் ஒளிப்பதிவுப் பணிகளைக் கவனிக்கிறார். 2023-ம் ஆண்டு ‘ரங்கோலி’ மூலம் அறிமுகமாகி, பின்னர் ஷேன் நிகம், நிஹாரிகா கொனிடேலா, கலையரசன் நடித்த ‘மெட்ராஸ்காரன்’ படத்தை இயக்கிய வாலி மோகன் தாஸின் மூன்றாவது படைப்பு என்பதால் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. தற்போது படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், படத்தின் தலைப்பு மற்றும் அடுத்தடுத்த அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.