மஹத் ராகவேந்திரா, தேவிகா சதீஷ், மானசா சௌத்ரி நடிப்பில் இன்று வெளியாகி இருக்கும் வெப் சீரிஸ், ‘எமோஜி’. இந்த வெப் சீரிஸ், ‘aha tamil ott’ தளத்தில் 7 சீரிஸாக வெளியாகி இருக்கிறது. சுகம், சோகம், சந்தோசம், துக்கம் இவை எல்லாவற்றையும் ஒரு சின்ன எமோஜியுடன் கடந்து செல்பவர்கள் இன்றைய இளைஞர்கள். அவர்களது வாழ்க்கையில் லவ், பிரேக் அப், லிவிங் டு கெதர், மேரேஜ், டைவர்ஸ் ஆகியன எப்படிபட்ட தக்கத்தை ஏற்படுத்துகிறது. அதை அவர்கள் எப்படி எடுத்து கொள்கிறார்கள். என்பதை, இளமை ததும்பி நிற்கும் நேர்த்தியான திரைக்கதையினால் சொல்லியிருக்கிறார், எழுதி இயக்கியிருக்கும் சென் .எஸ்.ரங்கசாமி.
மஹத் ராகவேந்திரா, மானசா சௌத்ரி, தேவிகா சதீஷ் உள்ளிட்ட அனைவரும் கதைக்களத்திற்கேற்ற கச்சிதமான தேர்வு. அந்தந்த கதாபாத்திரங்களாக கச்சிதமாக பொருந்திப் போகிறார்கள். இருந்தாலும் மஹத் ராகவேந்திரா, மானசா சௌத்ரியை விட தேவிகா சதீஷ் அனைவரின் மனதையும் கொள்ளை கொள்கிறார். அவர் காதலனை பிரேக்கப் செய்துவிட்டு அழும்போதும், டைவர்ஸ் கேட்டு கோர்ட்டுக்குள் நிற்கும் போதும் பக்குவபட்ட சிறப்பான நடிப்பினை வெளிப்படுத்தி இருக்கிறார். அதேபோல் மஹத் ராகவேந்திராவுடனான புதிய காதலை வெளிப்படுத்தும் போதும் சிறப்பான நடிப்பினை தேவிகா சதீஷ் வெளிப்படுத்தி இருக்கிறார்.
அடுத்ததாக மஹத்தின் காதலியாக நடித்திருக்கும் மானசா செளத்ரி. அவருடைய அம்மா, அப்பாவிற்காக அவர் செய்யும் தியாகம் சிலருக்கு நியாயமாகவும், சிலருக்கு தவறாகவும் தெரியும்! இவரும் பாராட்டும்படியே நடித்து அசத்தி இருக்கிறார். எந்த பிரச்சனையுமே இல்லாமல் பிரியும் வலியையும், வேதனையையும் சிறப்பாக வெளிப்படுத்துகிறார்.
மஹத் ராகவேந்திரா சந்தோஷம், சோகம் இரண்டிற்கும் வித்தியாசம் காட்ட முயற்சித்து நடித்து இருக்கிறார். இருந்தாலும் மானசா சௌத்ரி, தேவிகா சதீஷ் இருவருடனும் வருவதால் ஏற்றுக்கொள்ளலாம்!
ஆடுகளம் நரேஷ, விஜே ஆஷிக், பிரியதர்ஷினி உள்ளிட்டவர்களும் சிறப்பாகவே நடித்து இருக்கிறார்கள்.
ஜலந்தர் வாசனின் சிறப்பான ஒளிப்பதிவும், சனத் பரத்வாஜின் இசையும் இதமாகவும், இனிமையாகவும் உணர்வுகளோடு ஒன்றச்செய்கிறது.
அழுத்தமான, ஆழமான உணர்வுகளை எதார்த்தமான வசனங்களுடன், எதிர்பாரத திருப்பங்களுடன் இளமை கலந்த குளுமையுடன் இயக்கி இருக்கிறார், இயக்குநர் சென் .எஸ்.ரங்கசாமி.
‘எமோஜி’ 2 K கிட்ஸ் களின் சுவாரஸ்யமான காதல் கதை.