‘சிலப்பதிகாரம் முதல் சிங்கார சென்னை வரை’ –  ‘ஃபேமிலி பாய்’ டீசர்!

Mithun Manickam's Intense Action Thriller Family Boy Based On True Incidents

மெக்கானிக் பிக்சர்ஸ் தயாரிப்பில், மித்துன் மாணிக்கம் இயக்கி நடித்துள்ள ‘ஃபேமிலி பாய்’ (Family Boy) திரைப்படம் வரும் டிசம்பர் மாதம் 11-ஆம் தேதி உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் மிக பிரம்மாண்டமாக வெளியாகும் எனப் படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். இந்த ரிலீஸ் அறிவிப்பை ஒட்டி, தற்போது வெளியாகியுள்ள இத்திரைப்படத்தின் விறுவிறுப்பான டீசர் தியேட்டர் மற்றும் ஓடிடி ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பைப் பெற்று வருகிறது.

“சிலப்பதிகாரத்துல தொடங்கி சிங்கார சென்னை வரைக்கும், ஒரு பொருள் தொலையும் போது… அத தொலச்சவனுக்குத்தான் அதோட வலி புரியும்…” என்ற மிகவும் எதார்த்தமான, அதே சமயம் அழுத்தமான வசனத்துடன் இந்த டீசர் தொடங்குகிறது. கடந்த 2020 ஆம் ஆண்டு ஒரு நடுத்தரக் குடும்பத்தில் நிஜமாகவே நிகழ்ந்த ஒரு அதிர்ச்சிகரமான உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு இத்திரைக்கதை மிகவும் சஸ்பென்ஸாக உருவாக்கப்பட்டுள்ளது. தங்களுக்கு மிகவும் பிரியமான, காணாமல் போன ஒரு முக்கியப் பொருளைத் தேடி, கதையின் நாயகன் மேற்கொள்ளும் ஒரு நாள் (One Day Journey) அதிரடிப் பயணத்தில் அவனுக்கு ஏற்படும் சுவாரசியமான சம்பவங்களையும், அவன் எதிர்கொள்ளும் எதிர்பாராத ஆபத்தான திருப்பங்களையும் இந்த டீசர் மிகக் கச்சிதமாக வெளிப்படுத்துகிறது.

இப்படத்தின் டீசரில் இடம்பெற்றுள்ள நிர்மல் ஜே.பி.யின் அதிரவைக்கும் பின்னணி இசை மற்றும் கார்த்திக் கே. கதிரவனின் நேர்த்தியான காட்சி அமைப்புகள் என அனைத்து தொழில்நுட்ப அம்சங்களும் த்ரில்லர் ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்துள்ளன. ஒரு எளிய குடும்ப மனிதனின் திக் திக் ஒரு நாள் போராட்டத்தை மையமாகக் கொண்டு, டிசம்பர் 11-ஆம் தேதி திரைக்கு வரவிருக்கும் இந்த ‘ஃபேமிலி பாய்’ திரைப்படம், தியேட்டர்களில் பார்வையாளர்களுக்கு ஒரு புதுமையான சஸ்பென்ஸ் அனுபவத்தைக் கொடுக்கும் என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.