கரூர் மாவட்டம் க.பரமத்தி காவல் நிலையம் கடந்த 01-01-1919 அன்று துவங்கப்பட்டது. இந்த ஆண்டுடன் அந்த காவல் நிலையம் நூறு ஆண்டுகளை கடந்ததை தொடர்ந்து அதனை பெருமைபடுத்தும் விதமாக 17.07.2019-ம் தேதியன்று காவல் துறை சார்பாக நூற்றாண்டு விழா கொண்டாடப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் க.பரமத்தி பகுதியை சேர்ந்த பொதுமக்களுக்கு சிறப்பு மருத்துவ முகாம்¸ மரக்கன்றுகள் நடுதல் மற்றும் பள்ளி மாணவ – மாணவிகளுக்கு பாட உபகரணங்கள் மற்றும் விளையாட்டு போட்டிகள் காவல் துறை சார்பில் நடைப்பெற்றது.
போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு திருச்சி சரக காவல் துணை தலைவர் திரு. பாலகிருஷ்ணன் இ.கா.ப அவர்கள் பரிசுகளை வழங்கினார். மேலும் இந்நிகழ்ச்சியில் கரூர் மாவட்ட ஆட்சியர் திரு. அன்பழகன் இ.ஆ.ப அவர்கள் மற்றும் கரூர் மாவட்ட காவல் கண்பாணிப்பாளர் திரு. பாண்டியராஜன் அவர்கள் கலந்து கொண்டனர்.