எம்எக்ஸ் பிளேயரில் ‘கல்யாணம் கண்டிஷன்ஸ் அப்ளை 2.0’ புதிய இணைய தொடர்!

இணையத்தில் வெளியான ‘கல்யாணம் கண்டிஷன்ஸ் அப்ளை’ முதல் பாகத்தின் வெற்றியைத் தொடர்ந்து, ‘மிர்ச்சி’ செந்தில் குமாரும், அவரது மனைவி ஸ்ரீஜா சந்திரனும் இணைந்து நடிக்கும் புதிய இணைய தொடர் ‘கல்யாணம் கண்டிஷன்ஸ் அப்ளை 2.0’.

‘கல்யாணம் கண்டிஷன்ஸ் அப்ளை 2.0’ தொடரை ‘மிர்ச்சி பிளே ஒரிஜினல்’ தயாரிக்க, இயக்குனர் ஜஸ்வினி இயக்கியிருக்கிறார். இவர் இயக்குனர் கே எஸ் ரவிக்குமாரின் அசோசியேட்டாக மன்மதன் அம்பு, கோச்சடையான், போலீஸ்கிரி மற்றும் லிங்கா ஆகிய படங்களுக்கும், ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் ரங்கூன் திரைப்படத்திற்காக இணை இயக்குனராகவும் பணியாற்றியவர்.

கபிலன் வைரமுத்து எழுத்தில், விஷ்வா ஒளிப்பதிவில், எடிட்டர் பிரேம் படத்தொகுப்பில், உருவாகியிருக்கும் இத்தொடர், எம்எக்ஸ் பிளேயரில் வரும் ஜூலை 22ம் தேதி வெளியாகிறது.

இத்தொடர், ஒரு உயர் நடுத்தர வர்க்கத்தை சேர்ந்த காதல் தம்பதியர், தம் வாழ்வில் அன்றாடம் சந்திக்கும் அன்பையும் பாசத்தையும், காதலையும், மோதலையும், ஜனரஞ்சகமாக படம் பிடித்து காட்டுகிறது

உலகின் நம்பர் 1, பொழுதுபோக்கு ஆப், எம்எக்ஸ் பிளேயர் தனது சந்தாதாரர்களுக்கு, உயர்தர டிஜிட்டல் நிகழ்ச்சிகளை முதலில் வழங்குவதில் முன்னணி வகிக்கிறது. சுமார் 7.5 கோடி நித்திய பார்வையாளர்களைக் கொண்ட இத்தளம், இந்நாட்டின் மிகப் பெரிய பொழுதுபோக்கு தளம் என்றும், இரண்டு ஸ்மார்ட் போன்களில் ஒன்றில் தரவிறக்கம் செய்யப்பட்டு பயன்பாட்டில் இருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.