நடிகர் கமல்ஹாசன், சென்னை ஆழ்வார்பேட்டையிலுள்ள அவரது வீட்டில் கடந்த 3 வருடங்களுக்கு முன்னர் மாடிப் படியேறும்போது, கால் தவறி விழுந்தார். இதில் அவரது வலது காலில் முறிவு ஏற்பட்டது. அப்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு காலில் டைட்டானியம் ப்ளேட் பொருத்தப்பட்டது.
மருத்துவர்களின் அறிவுரையை மீறி, கட்சிப் பணி, பிக் பாஸ் உள்ளிட்ட பணிகளில் தொடர்ந்து கமல்ஹாசன் கவனம் செலுத்தி வந்ததால், அவருடைய காலில் தொடர் வலி ஏற்பட்டது.
இந்நிலையில் கமல்ஹாசன் இன்று காலை சென்னை ஸ்ரீராமச்சந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு எலும்பியல் அறுவை சிகிச்சை நிபுனர், மோகன்குமார் தலைமையில் அறுவை சிகிச்சை நடந்தது. இதில் கமல்ஹாசன் காலில் பொருத்தப்பட்டிருந்த டைட்டானியம் ப்ளேட் அகற்றப் பட்டது. மருத்துவர்களின் அறிவுரையின் படி 45 நாட்கள் அவர் ஓய்வில் இருப்பார்.
இது குறித்து கமல்ஹாசனின் மகள்கள் ஸ்ருதிஹாசன் மற்றும் அக்ஷராஹாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது…