‘லைகா புரோடக்சன்ஸ்’ சுபாஸ்கரனின் 2 கோடி நிதி உதவி!

 

ஹாலிவுட் படங்களுக்கு நிகரான செலவிலும், தொழில்நுட்பத்திலும் தமிழ்த்திரைப்படங்களை தயாரித்து வரும் நிறுவனம், ‘லைகா புரோடக்சன்ஸ்’.

இன்று (19.6.2021) தமிழ்நாடு முதலமைச்சர்  மாண்புமிகு. மு.க.ஸ்டாலினை தலைமைச் செயலகத்தில், ‘லைகா புரோடக்சன்ஸ்’ சுபாஸ்கரன் சார்பில் அதன் முதன்மை செயல் அலுவலர் ஜி.கே.எம். தமிழ்குமரன், இயக்குனர் ராஜாசுந்தரம் நிருதன் மற்றும் கெளரவ் சச்ரா ஆகியோர் சந்தித்தனர்.

அப்போது கொரோனா நிவாரணப் பணிகளுக்காக முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு 2 கோடி ரூபாய்க்கான காசோலையை வழங்கினார்கள். இந்த சந்திப்பின் போது சேப்பாக்கம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலினும் உடனிருந்தார்.