‘மாநாடு’ : விமர்சனம்!

‘வி ஹவுஸ் புரடக்‌ஷன்’ சார்பில் சுரேஷ் காமாட்சி தயாரித்துள்ள படம்,’மாநாடு’. இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கியிருக்கும் இந்தப்படத்தில் சிலம்பரசன், எஸ்.ஜே.சூர்யா, கல்யாணி, எஸ்.ஏ.சி, வாகை சந்திரசேகர், ஒய்.ஜி.மஹேந்திரன், பிரேம்ஜி, கருணாகரன் ஆகியோர் நடித்துள்ளனர்.

தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி, வெங்கட் பிரபு சிலம்பரசன் மூவரும் முதன்முதலில் இணைந்ததால் ‘மாநாடு’ ஆரம்பக்கட்ட தயாரிப்பு நிலையிலேயே ரசிகர்களிடையே மிகப்பெரிய எதிர்பார்ப்பினை உருவாக்கியிருந்தது. அந்த எதிர்பார்ப்பினை பூர்த்தி செய்திருக்கிறதா? பார்க்கலாம்.

‘மாநாடு’ படத்தின் கதை, பல படங்களில் நாம் பார்த்தது தான். ஆனால் ‘அறிவியல் புனைவு’ திரைக்கதை, இந்திய சினிமாவுக்கு முற்றிலும் புதியது. இனி கதைக்கு வருவோம்.

சிலம்பரசன் தன்னுடைய வாழ்நாளில் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் மறுபடியும், மறுபடியும் வாழக்கூடிய ‘டைம் லூப்’னில் மாட்டிக்கொள்கிறார். அதாவது எத்தனை முறை இறந்தாலும் மீண்டும் உயிர் பெற்று அதே சூழ்நிலையில் வாழும் சக்தி கொண்டவர். இந்த சூழ்நிலையில் எஸ்.ஜே.சூர்யா முதலமைச்சர் எஸ்.ஏ.சந்திரசேகரை கொல்லுமாறு சிலம்பரசனை நிர்பந்திக்கிறார். இதன் பிறகு நடக்கும் விறுவிறுப்பான, பரபரப்பான சம்பவங்கள் தான், படத்தின் திரைக்கதை மற்றும் க்ளைமாக்ஸ்!

பிரதான கதாபாத்திரங்களான சிலம்பரசன் – எஸ்.ஜே.சூர்யா இருவரின் கதாபாத்திரங்கள் வடிவமைக்கப்பட்ட விதம், ”மாநாடு’ படத்தின் வெற்றிக்கான மிகப்பெரிய பலம். நீயா நானா பார்த்திடலாம் வா டா! என மோதிக்கொள்வது சுவாரஸ்யம். வெங்கட் பிரபுவின் ‘பிர்லியண்ட் ஸ்கிரீன் ப்ளே’ ஒவ்வொரு காட்சியினையும் பரபரக்க வைக்கிறது. படத்தின் முதல் பாதியை விட இரண்டாம் பாதி இன்னும் சூப்பர்.

சிலம்பரசனும், எஸ்.ஜே.சூர்யாவும் நடிக்கும் ஒவ்வொரு காட்சியினையும் சுவாரஸ்யப் படுத்தியிருக்கிறார்கள்.

இவர்களை போலவே சின்ன சின்ன கதாபாத்திரங்களில் நடித்த கல்யாணி, எஸ்.ஏ.சி, ஒய்.ஜி.மஹேந்திரன், வாகை சந்திரசேகர், பிரேம்ஜி, கருணாகரன் ஆகியோர் கதாபாத்திரங்களுக்கு சிறப்பு சேர்த்து இருக்கின்றனர்.

ஒளிப்பதிவாளர் ரிச்சர்ட்  எம் நாதனினி ஒளிப்பதிவு, யுவனின் பின்னணி இசை, எடிட்டர் கே.எல்.பிரவினின் ‘எடிட்டிங்’ஆகியன,  படத்திற்கு மிக முக்கியமான பங்கு வகித்துள்ளது.

மொத்தத்தில் ‘மாநாடு’ ஒரு விறுவிறுப்பான மாஸ் கமர்ஷியல் எண்டர்டெயினர்.