மஹா – விமர்சனம்!

“Etcetera Entertainment’  சார்பில் V. மதியழகன்,  ‘மாலிக் ஸ்ட்ரீம்ஸ் கார்ப்பரேஷன்’சார்பில் டத்தோ அப்துல் மாலிக் ஆகியோர் இனைந்து தயாரித்துள்ள திரைப்படம் ‘மஹா’ .  ஹன்சிகா மோத்வானி கதையின் நாயகியாக  நடித்துள்ள இப்படத்தினில் T.R. சிலம்பரசன் ஶ்ரீகாந்த், தம்பிராமையா, கருணாகரன், பேபி மானஸ்வி மற்றும் பலர் நடித்துள்ளனர்.

இப்படம் ஹன்சிகா மோத்வானியின்  நடிப்பினில் வெளியாகியிருக்கும் 50 வது படம் . எப்படி இருக்கிறது.

ஹன்ஸிகாவின் குடும்பம் இருக்கும் ஏரியாவில் சிறுமிகள் கடத்தி பாலியல் வன்கொடுமை செய்து, அவர்களது உடல் கொடூரமாக சிதைக்கப்பட்டு தூக்கி வீசப்படுகிறது. போலீஸ் துப்பு துலக்கமுடியாமல் திணறி வருகிறது. இந்நிலையில் ஹன்ஸிகாவின் மகள் மானஸ்வியும் கடத்தப்படுகிறார். கடத்தப்பட்டவர் கிடைத்தாரா? கடத்தியது யார்? என்பது தான் ‘மஹா’ படத்தின் மீதிக்கதை.

சிலம்பரசனின் இன்ட்ரோ ஃபைட் சீன் அவரது ரசிகர்களுக்கானது. ஸ்டைலாக வரும் சிலம்பரசனும், அழகு ஹன்ஸிகாவும் ரசிகர்கள் மனதை கவர்கிறார்கள். ‘கெடுத்துட்டியே என்னை கெடுத்துட்டியே… டூயட் பாடலில் ஒளிப்பதிவு சூப்பர் இன்னொரு முறை பார்க்கத்தூண்டுகிறது. ஹன்ஸிகா இப்பாடலில் நெருக்கம் காட்டி நடித்து ரசிகர்களுக்கு கிறக்கம் கொடுக்கிறார்.

அதே சமயத்தில் அம்மாவாக நடித்திருக்கும் ஹன்சிகா, ஒவ்வொரு காட்சியிலும் நடிப்பினை அழகாக வெளிப்படுத்தியிருக்கிறார். தன்னுடைய மகள் மானஸ்வி கடத்தப்பட்ட நிலையில் அவர் போலீஸ் ஆஃபிசர் ஶ்ரீகாந்திடம் கெஞ்சும் இடத்தில் ஒரு தாயின் துயரத்தைக் காட்டி கண்களில் நீர் கசியச் செய்கிறார். இந்தக்காட்சியில் படம் பார்க்கும் பெண்களின் கண்களில் கண்ணீர் கொட்டும். க்ளைமாக்ஸில் வில்லனிடம் எதிர்த்து போராடும் காட்சியில் பெண்களின் கைதட்டையும் ,பாராட்டினையும் பெறுவார்.

வில்லனாக நடித்திருக்கும் சுஜித் சங்கர் மிரட்டுகிறார்.

கொலைகளை கண்டுபிடிக்கும் போலீஸ் ஆஃபிசராக ஶ்ரீகாந்த் நடித்திருக்கிறார். குறை சொல்ல முடியாத நடிப்பு.

போலீஸாக நடித்திருக்கும் தம்பி ராமையா மற்றும் கருணாகரன் இருவருமே சிறப்பாக நடித்திருந்தாலும் அதிக கவனம் பெறுபவர் தம்பி ராமையா தான்.

சஸ்பென்ஸோடு கூடிய இடைவேளையும் க்ளைமாக்ஸ் நெருங்கும் போது பல டிவிஸ்ட்டுகளும் ரசிக்க வைக்கிறது. இயக்குநர் யு.ஆர்.ஜமீல். திரைக்கதையில் இன்னும் சற்று கவனம் செலுத்தி இருந்தால் மிகப்பெரிய ஒரு வெற்றி பெற்றிருக்கும்.