பிரின்ஸ் பிக்சர்ஸ் தயாரிப்பில், ‘எஃப் ஐ ஆர்’ படத்தின் இயக்குநர் மனு ஆனந்த் இயக்கத்தில் உருவாகி வரும் படம், ‘Mr.X ‘.
ஆர்யா, கவுதம் கார்த்திக், அனகா ஆகியோர் நடிக்கும் இப்படத்தில் மஞ்சுவாரியர் தற்போது இணைந்து உள்ளார். இதனால இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
‘Mr X’ திரைப்படத்தின் ஆக்ஷன் காட்சிகளை ஸ்டண்ட் சில்வா தலைமையில்,வெளிநாடுகளில், படமாக்க திட்டமிடப்பட்டுள்ளது.
ஆர்யா, கவுதம் கார்த்திக் இருவரும் தங்களது உடற்கட்டினை ஆக்ஷன் காட்சிகளுக்கு ஏற்றபடி தயார்படுத்தி வருகின்றனர்.
‘Mr.X ‘, திரைப்படத்திற்கு திபு நிணன் தாமஸ் இசையமைக்க, ஒளிப்பதிவு செய்கிறார் தன்வீர் மிர். படத்தொகுப்பை பிரசன்னா GK மேற்கொள்ள இருக்கிறார்.
தயாரிப்பு வடிவமைப்பை ராஜீவனும், கலை இயக்கம் இந்துலால் கவீத்தும் ஆடை வடிவமைப்பை உத்தரா மேனனும் கவனிக்கின்றனர்.
தயாரிப்பு மேற்பார்வையாளர் AP. பால்பாண்டி. நிர்வாகத் தயாரிப்பு ஷ்ரவந்தி சாய்நாத். இப்படத்தின் இணை தயாரிப்பாளர் A.வெங்கடேஷ்.
‘Mr. X’ தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் வெளியாக உள்ளது.