‘சிவகுமாரின் சபதம்’  ஒரு ஃபீல்குட் மூவியாக இருக்கும் – ஆதி

Sathya Jyothi Films சார்பில் டி.ஜி.தியாகராஜன் மற்றும் Indie Rebels  சார்பில் ஹிப்ஹாப் தமிழா ஆதியின் நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ள படம் ‘சிவகுமாரின் சபதம்’.  ஆதியே இந்த படத்தில் கதாநாயகனாக நடிப்பதுடன், கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள் எழுதி இசையமைத்து இயக்கியிருக்கிறார். அறிமுக கதாநாயகியாக மாதுரி நடித்துள்ளார்.

தமிழ் சினிமாவில் இளம் ரசிகர்கள் விரும்பும் நடிகராக வலம் வரும் ஆதி இந்தப்படத்திலும் ஒரு யூடியூப் பிரபலமான ‘பிராங்ஸ்டார்’ ராகுலை நடிக்கச் செய்திருக்கிறார். அவரைப்போலவே இந்தப்படத்தில் பலர் புதுமுகங்ககளாக அறிமுகமாகியிருக்கிறார்கள்.

‘சிவகுமாரின் சபதம்’ படத்தின் டிரெய்லர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில்  பாடல்களும் வெளியாகி ரசிகர்களை கவர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது. வரும் செப்டம்பர் 30 ஆம் தேதி வெளியாகிறது.

Hiphop Tamizha Aadhi & Madhuri @ Sivakumarin Sabadham HD Pics

‘சிவகுமாரின் சபதம்’ படம் குறித்து நடிகர் ஹிப்ஹாப் தமிழா ஆதி கூறியதாவது…

‘தமிழர்கள் பண்டைக் காலம் முதற்கொண்டே அதாவது சுமார் 5,000 ஆண்டுகளுக்கு முன்னரே பருத்தி, பட்டு, கம்பளி ஆடைகளை தயாரிப்பதில் நிபுனத்துவம் பெற்றிருந்தனர். தமிழர்களின் நெசவுக்கலையை பற்றிய குறிப்புகள் தொல்காப்பியம், புறநானூறு, சிலப்பதிகாரம் போன்ற இலக்கியங்களில் காணலாம். ஆதிச்சநல்லூர் தொடங்கி மொகஞ்சதாரோ வழியாக உலகம் முழுவதும் பரவிக்கிடக்கிறது, தமிழனின் பெருமை.

இவ்வளவு பெருமைகளை கொண்ட இந்த நெசவுக்கலையை குறிப்பாக உலகப்புகழ்பெற்ற ‘காஞ்சிபுரம் நெசவுத்தொழிலின் பெருமையையும், அதன் தற்போதைய நிலைமையினையும் கொண்டு ஒரு எமொஷனல் அதேசமயம் ஒரு ஜாலியான படமாக ‘சிவக்குமாரின் சபதம்’ உருவாக்கப்பட்டுள்ளது.

சென்னையில் தொடங்கும் கதை, காஞ்சிபுரம், திருப்பூர், கோயமுத்தூர் என பயனித்து மறுபடியும் சென்னையில் முடிகிறது.

ஒரு பக்கா ஜாலியான எதைப்பற்றியும் கவலைப்படாத இளைஞனுக்கும் அவனுடைய தாத்தாவிற்கும் நடக்கும் எமோஷனல் ஃபீல்குட் மூவியாக, உங்கள் மனதை தொடும் படமாக இருக்கும்’. என்கிறார்.

‘சிவகுமாரின் சபதம்’ படத்தின் டிஜிட்டல் உரிமையினை ‘ டிஸ்னி ப்ளஸ்’ ஹாட்ஸ்டாரும், சேட்டிலைட் உரிமையை ‘விஜய்’ டிவி யும்வாங்கியுள்ளன.