‘லைகா புரொடக்ஷன்ஸ்’ , ‘தமிழ் குமரன் புரொடக்ஷன்ஸ் பிரைவேட் லிமிடெட்’, ‘பசங்க புரொடக்ஷன்ஸ்’ நிறுவனங்கள் தயாரித்து, பாண்டிராஜ் எழுத்து இயக்கத்தில் வெளிவந்துள்ள திரைப்படம், ‘பரிமளா அண்ட் கோ’. இதில் ஜெயராம், ஊர்வசி, சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி , அனந்திகா சனில்குமார் , சாண்டி , மிஷ்கின், GKM தமிழ்குமரன், சந்தோஷ் சோபன், காயத்ரி, பூர்ணிமா ரவி மற்றும் பலர். நடித்துள்ளனர்.
சென்னை கடற்கரை ஒட்டியுள்ள பகுதியில், பரிமளா- (ஜெயராம்) சுதந்திரம் (ஊர்வசி) தம்பதிகளுக்கு பராசக்தி ( சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி) மதுமிதா ( அனந்திக்கா சனில்குமார்) என ஒரு நடுத்தரமான குடும்பம் வசித்து வருகிறது. இவர்கள் வசித்துவரும் பகுதியிலேயே வர்க்கீஸ் (சாண்டி) அனைத்து சட்டவிரோதமான செயல்கள் செய்து கொண்டுவரும் ஒரு ரௌடி. இவன், அனந்திக்கா சனில்குமாரை காதலிக்க கட்டாயப்படுத்தி வருவதோடு மொத்தக்குடும்பத்திற்கும் தொல்லை கொடுத்து வருகிறான். இவனது அடாவடி எல்லை மீறிச்செல்கிறது. அதனால் மொத்த குடும்பமும் அவனை கொன்று விட்டால் நிம்மதி அடையலாம். என யோசித்து வருகின்றனர். இவர்கள் பேசிய அடுத்த நாளில் வர்க்கீஸ் கொலை செய்யப்படுகிறான். அதற்கு பழி தீர்க்க அவனது அம்மா ஒரு புறமும், கொலையாளியை கைது செய்ய போலீஸ் ஒரு புறமும் கொலை செய்தவரை தேடுகிறது. வர்க்கீஸை கொலை செய்தது யார்? ஏன்? என்பது தான் இப்படத்தின் கதை.
இதுவரை பாண்டிராஜ் இயக்கிய படங்களிலிருந்து முற்றிலும் மாறுபட்ட படம் இது. டார்க் ஹூமர் வகையிலான இந்தப்படம், ஒரு சில இடங்களில் மட்டுமே ரசிக்கும்படி இருக்கிறது. குறிப்பாக ஜெயராம் – ஊர்வசி ஜோடியின் கலக்கலான காமெடிகள் ஆங்காங்கே சிரிப்பு மூட்டுகிறது. அவர்களின் மகள்களாக நடித்திருக்கும் சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி மற்றும் அனந்திகா சனில்குமார் ஆகியோரது குறும்புத்தனமான சேட்டைகளும் ரசிக்க வைக்கிறது.
இன்ஸ்பெக்டராக நடித்திருக்கும் இயக்குநர் மிஷ்கினின், நடிப்பு ரசிக்க வைக்கிறது. ரௌடியாக சாண்டி. அவருக்கே உரித்தான கதாபாத்திரம். அதில் அப்படியே பொருந்திப்போகிறார். ஜி.கே.எம்.தமிழ்குமரன், மற்றும் காயத்ரி, யோகி பாபு, பூர்ணிமா ரவிக்ஷ் சிங்கம் புலி, பக்ஸ் பகவதி பெருமாள் என அனைவருமே குறிப்பிடத்தகுந்த வகையில் நடித்திருக்கின்றனர்.
போதைப் பொருள்கள் சர்வசாதாரணமாக கிடைக்கும் தமிழகத்தில், பெண்களுக்கு எதிரான பாலியல் சீண்டல்களையும், போதை கலாச்சாரத்தையும் முன்னிறுத்தி‘பரிமளா அண்ட் கோ’ படத்தினை கொடுத்திருக்கிறார், இயக்குநர் பாண்டிராஜ். அதை அப்படியே சீரியசான வகையில் கொடுத்திருந்தால் பரபரப்பான ஒரு க்ரைம் த்ரில்லர் படமாக அமைந்திருக்கும்.
பரிமளா அண்ட் கோ – டார்க் ஹூயூமர் ரசிகர்களுக்கானது!