இயக்குநர் பி. வாசு இயக்கத்தில் 65-வது படைப்பாகத் தயாராகி வரும் புதிய திரைப்படம் ‘சந்திரமுகி-2’. லைக்கா சுபாஷ்கரனின் ‘சந்திரமுகி 2’ வரும் செப்டம்பர் 28-ம் தேதியன்று உலகம் முழுவதும் வெளியாகவிருக்கிறது. இதில் ராகவா லாரன்ஸ், பாலிவுட் நடிகை கங்கனா ரணாவத், ‘வைகைப்புயல்’ வடிவேலு, ராதிகா சரத்குமார், மகிமா நம்பியார், லட்சுமி மேனன், சிருஷ்டி டாங்கே, விக்னேஷ், ரவி மரியா, சுரேஷ் மேனன், ராவ் ரமேஷ், சுபிக்ஷா கிருஷ்ணன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.
சந்திரமுகி 2 படத்தின் கதாநாயகனான ராகவா லாரன்ஸ், அவருடைய குருவும், ‘சந்திரமுகி’ படத்தின் நாயகனும், சூப்பர் ஸ்டாருமான ரஜினிகாந்தை சந்தித்துள்ளார்.
இந்த சந்திப்பின்போது, “சந்திரமுகி-2 படம் மாபெரும் வெற்றியைப் பெறும்” என சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்த்தையும், ஆசியையும் ராகவா லாரன்ஸிற்கு வழங்கியிருக்கிறார்.
வரும் செப்டம்பர் 28-ம் தேதியன்று வெளியாகவிருக்கும் இத்திரைப்படத்தின் முன் பதிவு தற்போது தொடங்கி இருக்கிறது. தொடங்கியவுடன் ரசிகர்கள் உற்சாகமாக படத்தினை காண்பதற்கு முன்பதிவு செய்து வருகிறார்கள்.
‘சந்திரமுகி-2’ படம், தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளிலும் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது.